Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க செவ்வாய்க்கிழமை பிறந்தவரா? அப்ப உங்களோட உண்மையான முகமும், பலமும் என்ன தெரியுமா?
Personality Test: ஒவ்வொரு நாளில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள அவர்களின் ராசி போலவே அவர்களின் பிறந்த கிழமையும் முக்கியமானதாக இருக்கிறது.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் மீது செவ்வாய் கிரகத்தின் தாக்கம் தெரியும். கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் இயல்பு சற்று உக்கிரமானது, அதன் தாக்கம் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் மீதும் வெளிப்படும். நவக்கிரகங்களில், செவ்வாய் கிரகத்திற்கு தளபதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் ஆளுமை
வாரத்தின் மூன்றாவது நாளாக செவ்வாய் உள்ளது. இந்த நாளின் அதிபதி செவ்வாய் என்பதால், செவ்வாய்க்கிழமை பிறந்தவர் போர் கடவுளான செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் போராடும் மனப்பான்மை மற்றும் உறுதியைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் தலைமைப்பொறுப்பில் இருக்கவும், வெற்றியாளாராக இருக்கவும் விரும்புவார்கள்.
அவர்களின் முக்கிய பண்புகள் என்னவெனில் உக்கிரமான குணம், சுறுசுறுப்பான இயல்பு, உற்சாகமான ஆற்றல் மற்றும் தைரியமாகும். அவர்கள் வெற்றியை அடைய எப்போதும் தீவிரமாக இருப்பார்கள், அவர்கள் பெரும்பாலும் அழிவுகரமானவர்களாக இருக்கலாம்.
செவ்வாய் கிழமை பிறந்தவர்க்ளின் தோற்றம்
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களின் உடல் அமைப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், பிரமிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். அவர்களின் முகத்தில் ஒரு சிறப்பு பளபளப்பு இருக்கும். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு சுருள் முடி, நீண்ட கழுத்து மற்றும் அகன்ற தோள்கள் இருக்கும். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களின் முகத்தில் சிறிய மச்சங்கள் இருக்கும். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் சற்று கருமையாகவும், கோதுமை நிறமாகவும் இருப்பார்கள்.
தொழில் வாழ்க்கை
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் அதிகம். மிகப்பெரிய பிரச்சினைகளைக் கூட ஒரு நொடியில் தீர்க்கும் திறன் அவர்களுக்கு இருக்கும். அவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் கூர்மையான மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், நீதியை நேசிப்பவர்களாகவும் இருக்கும். தங்கள் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்வது எப்படி என்பதை அறிந்தவர்கள் மற்றும் தங்கள் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள். அதனால் அலுவலகத்திலும், குடும்பத்திலும் அவர்களிடம் பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் இயந்திர வேலைகள் மற்றும் உடல் வலிமை சம்பந்தப்பட்ட பணிகளை மிக வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் அதை மிகவும் கவனமாக செய்வதன் மூலம் வாழ்வில் உயரத்தை அடைகிறார்கள். காவல் துறை, இராணுவம் மற்றும் வீரர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகள், கார் மெக்கானிக்ஸ், கார் பந்தயம், வாகன உற்பத்தி, சாகச விளையாட்டு போன்றவற்றில் அவர்கள் சிறப்பான வளர்ச்சியை அடைவார்கள்.
ஆரோக்கியம்
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள், இதனால் அவர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை மிகவும் குறைவாகவே எதிர்கொள்வார்கள். செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினை ஏதேனும் இருந்தால், அது விரைவில் குணமடையும். இவர்களுக்கு காயங்கள், விபத்துகள் போன்றவை அடிக்கடி ஏற்படலாம். எனவே அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
உறவுகள்
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சாதாரண உறவுகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் கோபம் காரணமாக, அவர்கள் உறவுகளில் நிறைய பின்னடைவுகள் இருக்கும். அவர்களை நன்றாக புரிந்துகொண்டவர்களுக்கு, அவர்களுடனான உறவு சிறப்பாகவே இருக்கும். அவர்களின் திருமண வாழ்க்கையில் அதிக ஏற்ற தாழ்வுகள் இருக்கும். அவர்கள் மிகவும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான வாழ்க்கைத் துணையைப் பெற்றாலும், ஏதோ ஒரு சிக்கல் அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதிர்ஷ்ட எண்
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு 9 ஆம் எண் அதிர்ஷ்டமானது. 9 ஆம் தேதி ஏதேனும் சுப காரியங்களையோ அல்லது புதிய காரியங்களையோ தொடங்கினால், அது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். வாழ்க்கையில் வெற்றியை உறுதி செய்ய அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்கலாம் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவலாம். சிவப்பு அவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












