Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Personality Test: திங்கள் கிழமை பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன தெரியுமா?
Personality Test: ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது பிறந்த ராசி போலவே நம்முடைய பிறந்த நாளும் முக்கியப்பங்கு வகிக்கிறது. நாம் யார் நம்முடைய ஆளுமை எப்படிப்பட்டது என்பதை நிர்ணயிப்பதில் பிறந்த நாளும் முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு கிரகமும் வாரத்தின் ஒரு நாளைக் கட்டுப்படுத்துகின்றன. அதன்படி இந்த பூமியில் சுற்றி ஏழு வகையான மக்கள் இருக்கிறார்கள்.
வாரத்தின் இரண்டாவது நாளான நீங்கள் திங்கட்கிழமை பிறந்திருந்தால், உங்களின் வாழ்க்கையில் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, திங்கட்கிழமை சிவபெருமானின் நாளாகும். நீங்கள் இந்த குறிப்பிட்ட நாளில் பிறந்திருந்தால், நீங்கள் சந்திரனைப் போல மென்மையாக இருப்பீர்கள். உங்களிடம் அனைவரையும் கவரும் வசீகரம் இருக்கும். இந்த பதிவில் திங்கள் கிழமை பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

திங்கள் கிழமை பிறந்தவர்களின் ஆளுமை
திங்கள் கிழமை பிறந்தவர்கள் அனைவரின் மீதும் அக்கறைக் கொண்டவர்களாக இருப்பார்கள், அதாவது அவர்கள் தங்கள் உணர்வுகளால் இயக்கப்படுகிறார்கள். சந்திரனின் நிலை எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது போல, திங்கட்கிழமை பிறந்தவரின் மனப்பான்மையும் மாறிக்கொண்டே இருக்கும். இந்த நாளில் பிறந்தவர்களின் நம்பிக்கையும், விருப்பமும் மாறிக்கொண்டே இருக்கும், இது அவர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்குகிறது.
அவர்கள் கடினமான சூழ்நிலைகளில் இருக்கப் பழகியிருந்தாலும், அவர்களின் உணர்வுகள் அவர்களுக்கு பெரும்பாலும் நல்ல முடிவுகளை வழங்கும். அவர்கள் சந்திரனைப் போல தோற்றமளிக்கும் வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் சந்திரனைப் போல புத்திசாலித்தனமாக இல்லை.
திங்கட்கிழமைகளில் பிறந்தவர்கள் உள்முக சிந்தனை கொண்டவர்களாகவும், எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பு மற்றவர்களின் உந்துதலுக்காகக் காத்திருப்பவர்களாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகவும், வசதியாகவும் உணரும் இடத்தில் இருப்பதை விரும்புகிறார்கள். குறிப்பாக குடும்பத்தினர் மீது அளவற்ற அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
தொழில் வாழ்க்கை
திங்கட்கிழமை பிறந்தவர்கள் மிகவும் மென்மையானவர்கள், மேலும் அவர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுக்காத வேலைகளைச் செய்ய விரும்புவதில்லை. சண்டைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குவாதங்கள் போன்ற தேவையற்ற விஷயங்களைப் பற்றி யோசித்து நேரத்தை வீணாக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். மேலும், தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற வலுவான விருப்பம் அவர்களுக்கு உள்ளது. எனவே மருத்துவம் அல்லது கல்வித் துறையில் வேலை அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
உறவுகள்
திங்கட்கிழமை பிறந்தவர்களுக்கு சந்திரனின் அமைதி இருப்பது போல, பிரகாசமும் உள்ளது. அவர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களின் கண்கள் அவர்கள் யார் என்பதைப் பற்றி நிறைய விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் மிகவும் அன்பாகவும், அக்கறையுடனும் இருப்பதால், வாழ்க்கையில் தங்கள் துணையை அவர்கள் நேசிக்கும் அளவுக்கு வேறு யாராலும் நேசிக்க முடியாது. அவர்களின் இதயம் மென்மையாக இருப்பதால், அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது கடினம்.
ஆரோக்கியம்
திங்கட்கிழமை பிறந்தவர்களுக்கு அடிக்கடி மனநிலை மாற்றங்கள் இருக்கும், இதனால் அவர்கள் சோகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையிலான நிலையிலிருந்து வெளியேறுவது கடினம். சில சமயங்களில் அவர்களின் மனநிலை மாற்றங்களால் அவர்கள் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும். அவர்கள் அடிக்கடி ஒற்றைத் தலைவலி, சளி மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்
திங்கட்கிழமை பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம். அவர்கள் திங்கட்கிழமை பிறந்ததால், வெள்ளை நிறம் அவர்களின் அமைதியான இயல்புக்கு ஏற்றதாக இருக்கும். எனவே அவர்கள் முக்கிய முடிவெடுக்கும் போது அல்லது முக்கியமான விஷயங்களை தொடங்கும் போது வெள்ளை நிறம் அணிவது நல்லது.
வெற்றிக்கான வழிகள்
திங்கட்கிழமை பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற மிக முக்கியமான சவாலாக மனநிலை மாற்றங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அதற்கு அவர்கள் யோகா மற்றும் தியானத்தைப் பயன்படுத்தலாம். அவர்கள் எதிர்மறை சூழலில் எளிதில் பாதிக்கப்படுபவர்கள் என்பதால், அதுபோன்ற இடங்களிலிருந்து விலகி இருப்பதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் இது அவர்களை காயப்படுத்தக்கூடும். தங்கள் இலக்கை அடைவதை உறுதி செய்ய அவர்களின் முயற்சியிலும், செயல்திறனிலும் உறுதி தேவை. திங்கள் கிழமைகளில் பிறந்தவர்கள் வெற்றிக்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
