இந்த 3 அதிர்ஷ்டமில்லாத எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் வாழ்க்கையில் எப்பவுமே ஏமாந்துகிட்டு இருப்பாங்களாம்!

ஒருவரின் ஆளுமையைத் தெரிந்து கொள்ள அவர்களின் ராசி மற்றும் பிறந்த தேதி உதவுவது போல அவர்களின் பெயரும் முக்கியமானது. ஒருவரின் பெயர் என்பது அவர்களின் அடையாளம் மட்டுமல்ல, அவரின் ஆளுமையின் திறவுகோலும்தான். ஒருவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவரது ஆளுமையை அறிய முடியும்.

ஒருவரின் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் அவருக்கு வாழ்க்கையில் காதல் கிடைக்குமா இல்லையா, உண்மையான காதல் கிடைத்த பிறகும் அவர் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பாரா, அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

People Named With These Letters Are Easily Cheated In Love in Tamil

அதன்படி சில எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் காதலில் ஏமாற்றப்பட வாய்ப்புகள் அதிகம், அவர்கள் காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டமே இல்லாதவர்கள். அது எந்தெந்த எழுத்துக்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

B எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள்

B என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள். இவர்கள் அழகானவர்களிடம் விரைவில் ஈர்க்கப்பட்டு அவர்களை காதலிக்கிறார்கள். அவர்களின் இந்த பலவீனம் அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. இதன் காரணமாக, அவர்கள் காதலில் ஏமாற்றப்படுகிறார்கள்.

B என்ற எழுத்தை கொண்டவர்கள் எப்போதும் சவாலான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க விரும்புகிறார்கள். அவர்கள் மிகவும் மென்மையான மனம் கொண்டவர்கள், மற்றவர்களுடன் அதிகம் பழகுவதில்லை. இவர்களுடன் நீங்கள் நட்பு கொண்டால், அது நீண்ட காலம் நீடிக்கும், ஏனெனில் இவர்கள் உறவுகளின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்தவர்கள். அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி திறந்த மனதுடன் காதலை ஏற்றுக்கொள்கிறார்கள், இதன் காரணமாக அவர்கள் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள்.

E எழுத்தில் பெயர் கொண்டவர்கள்

E எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள் மற்றும் வெளிப்படையான மனதுடையவர்கள். இவர்கள் எந்த யோசனையும் இல்லாமல் மிக விரைவாக காதலில் விழுவார்கள். மேலும், தங்கள் துணை மீது தீவிர காதல் கொண்டவர்கள். இதனால்தான், அவர்கள் காதலில் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள்.

இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள், சிரிக்கும் பழக்கம் அதிகம் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பார்கள். எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்தும் இயல்பு கொண்டவர்கள். அவர்கள் எப்போது யார் மீது காதலில் விழுவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. அதனால் இவர்கள் வாழ்க்கையில் எண்ணற்ற காதல்கள் வரும் ஆனால் எதுவும் நிலைத்து நிற்காது.

M எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள்

M எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் தங்கள் துணையிடம் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள், மேலும் அவர்கள் விரும்பும் துணைக்காக அனைத்தையும் செய்வார்கள். இருப்பினும், அவர்கள் காதலில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் தங்கள் மனதில் உள்ள விஷயங்களை மூடி மறைக்கும் போக்கைக் கொண்டுள்ளனர். அத்தகைய இயல்பு சில நேரங்களில் மற்றவர்களுக்கு ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

யாராவது வெளிப்படையாக கசப்பான விஷயத்தை சொன்னாலும், விஷயம் அங்கேயே முடிகிறது, ஆனால் விஷயங்களை மனதில் வைத்திருப்பதால் ஏற்படும் விளைவு நல்லதல்ல. அத்தகையவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருப்பது நல்லது. காதலைப் பொறுத்தவரை, அவர்கள் உணர்திறன் உடையவர்கள், அவர்கள் உறவில் மூழ்கிவிடுகிறார்கள், ஆனால் அவர்களின் எதிர்மறை குணம் எப்போதும் அவர்களை சிங்கிளாக இருக்க வைக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion