Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த 3 நட்சத்திரத்தில் பிறந்தவங்க எவ்வளவு கடினமாக உழைத்தாலும்.. தோல்வி மட்டும் தான் கிடைக்குமாம்...
These Nakshatras Will Always Face Failure In Life: நாம் ஒவ்வொருவருமே ஒரு இலக்கை நோக்கி தான் வாழ்ந்து வருகிறோம். அந்த இலக்கை என்றாவது ஒருநாள் நிச்சயம் அடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறோம். இப்படிப்பட்ட நம்பிக்கை தான் ஒருவருக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியத்தை அளிக்கிறது.
ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசி மற்றும் நட்சத்திரங்கள், அந்நபரின் குணாதிசயங்கள், நன்மை, தீமைகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை தீர்மானிப்பதாக கூறப்படுகிறது. அதுவும் சில நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் அவர்களது வாழ்வில் தொடர்ந்து தோல்விகளை சந்திக்க வைப்பதாக கூறுகிறது.

முக்கியமாக இந்த நட்சத்திரக்காரர்கள் எவ்வளவு தான் வெற்றி அடைய கடினமாக முயற்சித்தாலும், அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இப்போது அந்த துரதிர்ஷ்டமான நட்சத்திரக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவர் மற்றும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் காந்த ஆளுமையைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் காதலில் தீவிரமாக இருப்பார்கள். தனது துணைக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தலை மற்றும் விளையாட்டுத் துறையில் சாதனை புரிவார்கள். மேலும் இந்த நட்சத்திரக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள் மற்றும் அதற்காக பாடுபடுவார்கள். ஆயினும், இவர்களின் சில குறைபாடுகள் அவர்களை தோல்வியுறச் செய்யும்.
என்ன தான் பரணி நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சித்தாலும், மனதில் இருக்கும் கோபத்தை அதிகமாக வெளிக்காட்டுவார்கள். இதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். முக்கியமாக இந்த கோபமே அவர்களின் தோல்விகளுக்கு முக்கியமாக இருக்கும். இந்த கோபத்தாலேயே பணியிடத்தில் முன்னேற்றத்தில் நிறைய தடைகளை சந்திப்பார்கள்.
மூலம்
27 நட்சத்திரங்களில் 19 ஆவது நட்சத்திரம் தான் மூலம். இந்த மூல நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பொதுவாக தைரியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் எப்பேற்பட்ட சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பார்கள். சுதந்திரமான சிந்தனையாளர்கள், நிறைய பயணத்தை மேற்கொள்ள விரும்புவார்கள், படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மேலும் இவர்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.
இருந்தாலும் இந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் தோல்வியையே சந்திப்பார்கள். முக்கியமாக படித்து முடித்து வேலை பெறுவதில் அதிகமாக சிரமப்படுவார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் நிதி சிக்கல்களை அதிகம் சந்திக்க நேரிடும். குறிப்பாக இவர்களால் திட்டமிட்ட வேலைகளை செய்ய முடியாமல் போகலாம்.
கார்த்திகை
27 நட்சத்திரங்களில் 3 ஆவது நட்சத்திரம் தான் கார்த்திகை நட்சத்திரம். இந்த நட்சத்திரக்காரர்கள் வலுவான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள் மற்றும் இவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கலைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பணியிடத்தில் செய்யும் வேலையில் பிரச்சனைகளுடன், தோல்விகளை சந்திக்க நேரிடும். வேலை தேடிக் கொண்டிருந்தால், வேலை கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையும் பிரச்சனைகள் நிறைந்து இருக்கும். இந்த நட்சத்திரக்காரர்களால் தங்கள் உறவில் உள்ள பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியாது. இவை அனைத்தும் இவர்களுக்கு வெற்றிக் கனியை சுவைக்க முடியாமல் செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications