Latest Updates
-
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் ரொம்ப ரொமான்டிக்கானவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?
ரொமான்டிக்காக இருப்பது என்பது அனைவராலும் முடியாத ஒரு காரியமாகும். ஏனெனில் ரொமான்ஸ் என்பது வெறும் கட்டிப்பிடிப்பது மற்றும் முத்தம் கொடுப்பது மட்டுமல்ல. தங்கள் துணையின் மீது எவ்வளவு ஆத்மார்த்தமாக காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை பொறுத்தது. ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்களிடம் இயற்கையாகவே ரொமான்டிக்கான உணர்வு அதிகமாக இருக்கும்.
இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் காதலி அல்லது க்ரஷ் மீது வலுவான காதல் உணர்வு கொண்டவர்களாகவும், அந்த சிறப்பு வாய்ந்தவர் மீது தீவிரமான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் இனிமையான செயல்கள் மூலம் தங்கள் அன்பை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் துணையின் மீது மிகவும் காதல் மற்றும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி
காதலைக் கொண்டாடும் பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்கள். அவர்கள் கற்பனைத் திறனும், கருணையும் மிக்கவர்கள், மேலும் இந்த குணங்கள் அவர்களை மிகவும் ரொமான்டிக்கானவர்களாக மாற்றுகிறது. அவர்கள் தங்கள் துணையின் உணர்ச்சிகளை நன்கு அறிவார்கள், மேலும் அன்பு மற்றும் கருணை நிறைந்த செயல்கள் மூலம் தங்களை காதலை எப்போதும் விரும்புகிறார்கள்.
தங்கள் துணையிடம் அவர்கள் மிகவும் தன்னலமற்றவர்களாகவும், தங்கள் துணையிடம் அதிக பச்சாதாபம் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அவர்களுக்கு காதல் கடிதங்கள் எழுதுவது முதல் தன்னிச்சையான பயணங்கள் மேற்கொள்வது வரை, அவர்கள் காதல் விஷயத்தில் ஒவ்வொரு விஷத்தையும் பார்த்து பார்த்து ரொமான்டிக்காக செய்வார்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் காதலை மிகவும் பணிவாகவும், எளிமையாகவும் அணுகுகிறார்கள். அவர்கள் காதலில் தொடுதல் மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள். எனவே அவர்கள் நம்பகமான காதலர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் காதலை பெரும்பாலும் உடல்ரீதியான நெருக்கத்தின் மூலம் வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களிடம் இல்லாத நெருக்கம் அவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தவர்கள் மீது அதிகமாக இருக்கும்.
முத்தமிடுவது என்பது தங்கள் துணையிடம் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான வழியாகும். அவர்கள் எப்போதும் ஆடம்பரமான வசதிகளை அனுபவிக்க விரும்புகிறார்கள். தாங்கள் அனுபவிக்கும் ஆடம்பரத்தை தங்கள் துணையும் அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். தங்கள் துணையின் பாசத்தைப் பெற, அவர்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருப்பார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். குறிப்பாக அவர்களின் காதல் வாழ்க்கை என்று வரும் போது மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் காதலும், ரொமான்டிக்கான எண்ணங்களும் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படையாகத் தெரியும். அவர்கள் எப்போதும் ஈர்ப்பின் மையமாக இருக்க விரும்புகிறார்கள், மேலும் தங்கள் துணையிடமிருந்து கவனத்தைப் பெற விரும்புகிறார்கள்.
அவர்கள் தங்கள் துணைக்கு நிறைய பாராட்டுக்களைத் தெரிவிப்பதன் மூலம் அதிக அன்பையும் கவனத்தையும் காட்டுகிறார்கள். அவர்கள் நேசிக்கப்படவும் போற்றப்படவும் விரும்புவதால், தங்கள் துணியை சிறப்பாக உணர வைக்க அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பிலேயே காதல் உணர்வு அதிகம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் துணையின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவர விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்புவதால், தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் சமநிலைப்படுத்த விரும்புகிறார்கள்.
அவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள், ஒருவரை காதலிக்கும் காதலிக்கும்போது ஒரு சிறந்த ரொமான்டிக்கான சூழலை உருவாக்க கடினமாக முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையிடம் தங்கள் அன்பை மலர்கள் மற்றும் பரிசுகள் கொடுப்பது போன்ற காதல் சைகைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
