Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுக்க ஏழையாதான் இருப்பார்களாம்... உங்க பிறந்த மாதம் என்ன?
வாழ்க்கையில் கோடீஸ்வரராக வேண்டுமென்பதுதான் அனைவரின் மிகப்பெரிய கனவாக இருக்கும். சிலர் தங்களின் திறமையாலும், அயராத உழைப்பாலும் அவர்களின் கனவை அடைந்து விடுவார்கள். ஆனால் சிலர் அவர்களின் பொறுப்பின்மையாலும், திறமையின்மையாலும் வாழ்க்கையில் இறுதிவரை பணக்காரராக மாட்டார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் திறமையற்றவர்களாக இருப்பார்கள். பண விஷயத்தில் திறமையற்றவராக இருப்பது என்பது அவர்கள் பணம் சம்பாதிக்க திறமையற்றவர் என்று அர்த்தமல்ல. அவர்கள் நன்றாகச் சம்பாதித்தாலும், சம்பாதித்த அனைத்தையும் கண் இமைக்கும் நேரத்தில் செலவழித்துவிடுவார்கள்.

பண விஷயத்தில் திறமையானவர்கள் பணத்தைச் சேமிப்பார்கள், மேலும் அதை முழுவதுமாகச் செலவழிக்க வேண்டும் என்ற தேவையை அவர்கள் உணர மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் எதிர்பார்த்த ஆடம்பர வாழ்க்கையை எதிர்காலத்தில் அடைவார்கள். ஆனால் சில மாதத்தில் பிறந்தவர்கள் இதற்கு முற்றிலும் எதிர்மறையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பணக்காரராக மாட்டார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், அதனால் பணம் சம்பாதிப்பது என்பது அவர்களுக்குப் பெரிய கடினமான காரியம் அல்ல. ஆனால், சம்பாதித்த பணத்தைச் சேமிப்பதுதான் அவர்களுக்கு முக்கியப் பிரச்சனையாக இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், நிகழ்காலத்தில் வாழ்வதிலேயே அதிக கவனம் செலுத்துவார்கள்.
இந்த மனப்பான்மையே பெரும்பாலும் அவர்களிடம் பணப் பற்றாக்குறை ஏற்படக் காரணமாகிறது. அவர்கள் சேமிப்பதிலோ அல்லது எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதிலோ அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் வாழ்க்கையை அனுபவிப்பதில்தான் அதிக நாட்டம் கொண்டவர்கள். எனவே, அவர்கள் எப்போதும் பணக்காரராவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் பணக்காரராகாமல் போவதற்கு காரணம் அவர்களுக்குள் இருக்கும் தர்ம சிந்தனைதான். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் தேவைகளுக்கு பணம் இல்லமால் போனாலும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக தங்களிடம் உள்ள கடைசி பணத்தையும் செலவிடுவார்கள், அவர்கள் மற்றவர்களுக்கு மனமுவந்து கொடுக்கும் குணம் கொண்டவர்கள்.
அவர்கள் சுயநலமற்றவர்கள், நிதிரீதியாக அவர்களுக்கு லாபம் அளிக்காவிட்டாலும், அவர்கள் எப்போதும் மற்றவர்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவார்கள், அதற்காகவே உழைப்பார்கள். பணத்தின் மீது அவர்களுக்கு பற்று ஏற்பட ஒரே காரணம், அதை வைத்து மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதுதான். அதனால்தான் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பணக்காரராகாமல் இருக்கிறார்கள்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் ஆடம்பரமாக செலவழிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார்கள். மார்க்கெட்டில் எந்த புதிய போன் வந்தாலும், புதிய வாகனம் வந்தாலும் அதை வாங்க வரிசையில் முதலாவதாக அவர்கள்தான் நிற்பார்கள். தங்கள் வாழ்க்கையை தங்களின் விருப்பப்படி வாழ்வதற்காக அவர்கள் பணத்தை செலவழிக்க ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள்.
தங்களின் ஆடம்பரத் தேவைகளுக்கக கண் இமைக்கும் நேரத்தில் தங்களுடைய மொத்த சேமிப்பையும் காலி செய்யும் தைரியம் இவர்களிடம் மட்டுமே இருக்கும். அவர்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதை விட தாராளமாக பணத்தை செலவழிக்கவே விரும்புவார்கள்.
செப்டம்பர்
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமானவர்களாகவும், செலவு செய்வதில் மிகவும் பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் பரிசுகள் விஷயத்தில் அவர்கள் பெரும்பாலும் தங்கள் எல்லைகளை மீறி சென்று விடுவார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும், ஏன் தங்களுக்குக்கூட, சிறந்த பரிசுகளை வழங்க விரும்புவார்கள். அவர்கள் ஒருபோதும் மலிவான பொருட்களை வாங்க மாட்டார்கள், அவர்கள் எப்போதும் மிக உயர்தரமான பொருட்களையே தேர்ந்தெடுப்பார்கள். அதனால் அவர்களின் சேமிப்புகள் எப்போதும் கரைந்து விடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












