இந்த 3 மாதங்களில் பிறந்தவர்கள் ரொம்ப பலவீனமானவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் எது?

ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற மன வலிமை என்பது மிகவும் அவசியமானதாகும். அனைவருக்குள்ளும் மனவலிமை இருந்தாலும் சிலரிடம் அது மற்றவர்களை விட குறைவாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த மாதமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் சாந்தமான மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படுவார்கள், அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவை எதிர்பார்ப்பார்கள்.

அவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஆளுமை கொண்டவர்கள் மற்றும் மிகவும் மென்மையானவர்கள், அவர்களால் மன வேதனையை அனுபவிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. அத்தகையவர்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்கள் மற்றும் தனியாக இருப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

People Born On These Months Are Mentally Weak

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் தங்கள் வளர்ப்பு மற்றும் அக்கறையுள்ள தன்மைக்கு பெயர் பெற்றர்கள், ஆனால் அவர்களின் மனநிலை மாற்றங்கள் அவர்களை மனரீதியாக பலவீனமாவர்களாகக் காட்டக்கூடும். மற்றவர்களின் விமர்சனம் மற்றும் துரோகத்தால் அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.

அன்புக்குரியவர்களுடனான அவர்களின் பற்றுதல் பாராட்டத்தக்கது, ஆனால் அவர்களுக்கு முற்றிலும் பொருந்தாத உறவிலிருந்து வெளிவர அவர்கள் கடினமாக போராடுவார்கள், இது அவர்களை மிகவும் பலவீனமானவராக மாற்றும். புஅவர்கள் மனவேதனையில் இருக்கும் போது அதை எதிர்த்து போராடாமல் ஓடி ஒளிந்து கொள்வார்கள், வாழ்க்கையின் எதார்த்தத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது.

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விரும்புபவர்கள். அவர்களின் மிகப்பெரிய பலவீனம் அவர்களின் முடிவெடுக்கும் திறனில் உள்ளது. ஏனெனில் அவர்களால் எந்த முடிவையும் துரிதமாக எடுக்க முடியாது. அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கும் முடிவுகளைப் பற்றியே அவர்கள் அதிகமாக யோசிப்பார்கள், இது பெரும்பாலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் அல்லது அவர்களை தேடிவரும் வாய்ப்புகளை இழக்க வைக்கும்.

அவர்கள் வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களை நினைத்து அஞ்சுகிறார்கள், இது கடினமான சூழ்நிலைகளில் அவர்களை செயலற்றவர்களாகவோ அல்லது பலவீனமாகவோ மாற்றலாம். அவர்களுக்கு எதிராக சதிகள் செய்யப்படும் போது அதை எதிர்ப்பதற்குப் பதிலாக அவர்கள் அதிகமாக சமரசம் செய்து கொள்ளலாம், இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை பாதிக்கும்.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகக் கருதப்படுகிறார்கள், அவர்கள் அனைத்து விஷயங்களையும் துல்லியமாக கவனிப்பார்கள். அவர்களின் மிகப்பெரிய பலவீனமே அதிகமாக சிந்திப்பதும், சுயவிமர்சனம் செய்து கொள்வதும்தான். அவர்கள் எப்போதும் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் மிக உயர்ந்த தரங்களை நிர்ணயித்துக் கொள்கிறார்கள், இது பெரும்பாலும் ஏமாற்றம் மற்றும் அதிருப்திக்கு வழிவகுக்கிறது.

அவர்கள் அனைத்தையும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் சில நேரங்களில் அவர்கள் மனரீதியாக சோர்வடைகிறார்கள் மற்றும் உணர்வுரீதியாக அணுக முடியாதவர்களாகிறார்கள். அனைவரிடமும் குறைகளைக் கண்டறியும் போக்கு அவர்களை தனிமையில் தள்ளும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion