Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இந்த 3 மாதங்களில் பிறந்தவர்கள் ரொம்ப பவர்புல்லானவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?
ஜோதிடரீதியாக ஒருவரின் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமானதோ அதேபோல அவர்களின் பிறந்த மாதமும் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அவர்கள் பிறந்த மாதமும் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
வெற்றி என்பதற்கான வரையறை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்வது வெற்றியாக இருக்கும், சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு கட்டுவது வெற்றியாக இருக்கும், சிலருக்கோ வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணத்தை வைத்திருப்பது வெற்றியாக இருக்கும்.

ஆனால் எப்படியும் வாழ்க்கையில் வெற்றியடைந்து விட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். அனைவராலும் அதை அடைய முடிகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் சில மாதங்களில் பிறந்தவர்கள் வெற்றியை பெறுவதற்காகவே பிறந்தவர்களாக இருப்பார்கள். அது எந்தெந்த மாதங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜனவரி
ஜனவரியில் பிறந்தவர்கள் கடுமையான சூழ்நிலையை தாங்கிக்கொள்ள கூடிய வலிமையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவர்கள் விடாமுயற்சியுடன் அதை எதிர்ப்பார்கள். ஆண்டின் முதல் மாதத்தில் பிறந்த இவர்கள் தங்கள் அசைக்க முடியாத நிலைத்தன்மையால் அவர்கள் விரும்பும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள்.
அவர்கள் ஒரு விஷயத்தில் தங்கள் இலக்குகளை அமைத்தவுடன், அவர்கள் தங்கள் இலட்சியத்தின் உச்சத்தை அடையும் வரை அதை நிறுத்த மாட்டார்கள். அவர்களின் பிடிவாத குணம் மற்றும் வலுவான மனநிலை அவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் சாதகமாக செயல்படுகிறது. தோல்விகள் குறித்து அவர்கள் ஒருபோதும் அஞ்சுவதில்லை, மாறாக தோல்விகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவதை சாகசமாகக் கருதுகிறார்கள்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் மிகப்பெரிய பலமே அவர்கள் நெகிழ்வுத்தன்மைதான். கற்பனைத்திறனும், பச்சாதாபமும் கொண்ட இவர்கள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை எளிதில் தகவமைத்துக் கொள்ள முடியும். அவர்களின் வெளிப்படையான இயல்பு, வெவ்வேறு கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
கடினமான சூழ்நிலைகளில் அமைதியைக் கடைபிடிக்கக் கூடிய அவர்கள் கிட்டத்தட்ட எந்த சூழ்நிலைக்கும் ஏற்ப தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள முடியும். மற்றவர்கள் வெற்றிக்காக ஒரே வழியில் வேகமாக ஓடும்போது, மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் பல வழிகளில் நிதானமாக ஓடுகிறார்கள். நிதானமாக சென்றாலும் அவர்களின் வெற்றி என்பது உறுதியானது மற்றும் தடுக்க முடியாதது.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதிலும், சூழலுக்கு ஏற்ப மாறுவதில் சிறந்து விளங்குகிறார்கள். தனித்துவமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இவர்கள் தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ள வெட்கப்பட மாட்டார்கள். இருப்பினும், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் மர்மங்களை தைரியமாக ஆராய்கிறார்கள்.
ஆண்டின் கடைசி மாதத்தில் பிறந்தவர்கள் அவர்கள் விரும்பும் வெற்றியை அடைய மற்றவர்கள் சிந்திக்காத கோணத்தில் செயல்படுவார்கள். அவர்களின் ஒரு திட்டம் தோல்வி அடைந்தால் அவர்கள் அடுத்த திட்டத்தை உடனடியாக தயாராக வைத்திருப்பார்கள். அவர்கள் ஒரு தடையை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவர்கள் ஒரு புதிய தொடக்கத்தைக் கண்டுபிடிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
