Latest Updates
-
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்..
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் தோற்பதற்காகவே பிறந்தவர்களாம்... உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
காதல் என்பது அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் வரும் ஒரு அழகிய உணர்வாகும். "காதலிக்காத மனிதன் இல்லை, காதலிக்காதவன் மனிதனே இல்லை" என்று கூறுவார்கள். காதல் ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவங்களை அளிக்கிறதோ அதேயளவிற்கு துயரத்தையும் வழங்கக்கூடியது. அதனால்தான் காதல் மனிதர்கள் அனுபவிக்கும் மிகவும் சிக்கலான உணர்ச்சியாக கூறப்படுகிறது.'
சிலர் எளிதில் வெற்றிகரமான காதல் வாழ்க்கையை அடைந்தாலும், சிலர் அவர்களின் துரதிர்ஷ்டத்தால் தொடர்ந்து காதல் முறிவுகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு அவர்கள் பிறந்த தேதியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண் கணிதம் கூறுகிறது. எண்கணிதம் ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் காதல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கக்கூடும் என்று கூறுகிறது.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த நபர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் அதிக சவால்களைச் சந்திக்க நேரிடலாம். அவர்கள் காதல் வாழ்க்கையில் தோல்விகளும், துரதிர்ஷ்டமும் அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் காதல் வாழ்க்கையில் துரதிஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
எண் 4 (அனைத்து மாதத்திலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ராகு கிரகத்தால் வழிநடத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இவர்கள் தங்கள் எதார்த்த மற்றும் பெரும்பாலும் பிடிவாதமான இயல்புக்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் உறவுகளை உணர்ச்சிகளுக்குப் பதிலாக லாஜிக்காக அணுக முனைகிறார்கள். காதல் என்பது உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்டதால் இவர்கள் முற்றிலும் அதிலிருந்து விலக நேரிடும். இவர்கள் தங்கள் துணையால் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவோ அல்லது உணர்ச்சிரீதியாக விலகி இருப்பவர்களாகவோ கருதப்படலாம், இது மனவேதனைக்கு வழிவகுக்கும். உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு உள்ள சிரமம், அவர்களின் துணையை அவர்களின் அர்ப்பணிப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது, இதனால் அவர்கள் அடிக்கடி காதல் முறிவுகளை சந்திக்க நேரிடும்.
எண் 7 (அனைத்து மாதத்திலும் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புரிந்துகொள்ளக் கடினமான கேது கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் உள்முக சிந்தனை கொண்டவர்களாகவும், தங்களைப் பற்றியே எப்போதும் சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள், பெரும்பாலும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிடுவார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த மிகவும் சிரமப்படுகிறார்கள். இது அவர்களை நம்பிக்கையற்றவர்களாக மாற்றும். இது அவர்களின் காதல் உறவில் அடிக்கடி விரிசல்களை உருவாக்கக்கூடும். இதனால் அவர்களின் காதல் உறவுகள் எப்போதும் நீண்ட காலம் நீடிக்காது.
எண் 8(அனைத்து மாதத்திலும் 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள்)
சனியால் ஆளப்படும் பிறவி எண் 8 கொண்ட நபர்கள், தங்கள் உறவுகளைப் புறக்கணித்து, தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட இலட்சியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் தீவிரமான மற்றும் கண்டிப்பான குணம், அவர்களின் துணையை எப்போதும் இறுக்கமான சூழ்நிலையில் இருப்பதற்கு வழிவகுக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்துவதில் உள்ள சிரமமும், உறவுகளில் எப்போதும் லாபங்களை எதிர்பார்ப்பதும் அவர்களின் உறவுகளில் சிக்கல்களை உருவாக்கலாம். உணர்ச்சிப்பூர்வமான இணைப்பு இல்லாததும், தங்கள் துணைக்கு போதுமான ஆதரவை கொடுக்காமல் இருப்பதும் அவர்களின் காதல் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












