Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கும்ப ராசியில் உருவாகும் பஞ்சகிரக யோகம்: பிப்ரவரி 17 முதல் இந்த 5 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்..
Panchgrahi Yog In Aquarius 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் ஒரு சக்தி வாய்ந்த அரிய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த ராஜயோகமானது சனி பகவானின் கும்ப ராசியில் நிகழவுள்ளது.
ஏற்கனவே இந்த கும்ப ராசியில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், செல்வத்தின் காரணியான சுக்கிரன் மற்றும் நிழல் கிரகமான ராகு பயணித்து வருகின்றனர். மேலும் பிப்ரவரி 13 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் கும்ப ராசிக்குள் நுழையுவுள்ளார்.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 17 ஆம் தேதி மனதின் காரணியான சந்திரன் கும்ப ராசிக்குள் நுழையவிருக்கிறார். இதனால் கும்ப ராசியில் 5 கிரகங்கள் ஒன்றிணைந்து, சிறப்பான ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். அது தான் பஞ்சகிரக யோகம்.
ஜோதிடத்தில் பஞ்சகிரக யோகம் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில், வருமானம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப் போகிறது. அதோடு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கப் போகிறது. இப்போது கும்பத்தில் உருவாகும் பஞ்சகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
பஞ்சகிரக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
ரிஷபம்
பஞ்சகிரக யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். தலைமைத்துவ குணங்கள் மேம்படும். வேலையில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். மொத்தத்தில் நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சாதகமாக இருக்கும்.
மிதுனம்
பஞ்சகிரக யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். மொத்தத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பஞ்சகிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய விஷயங்களை இக்காலத்தில் முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், வசதிகளும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பஞ்ச கிரக யோகத்தால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, சமூக அந்தஸ்து உயரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் வருமான உயர்வை காண்பார்கள். மொத்தத்தில் இக்காலம் தொழில், சமூக அந்தஸ்து மற்றும் நிதி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications