Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்காரங்க தலையெழுத்து மோசமாக மாறப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றப்போகின்றன. இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் ஏற்படுத்தப்போகிறது. சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் போன்ற பல சக்திவாய்ந்த கிரகங்கள் தங்களின் நிலையை அக்டோபர் மாதத்தில் மாற்றுகின்றன.
நவபஞ்சம, மாளவ்ய மற்றும் ருச்சக ராஜயோகம் போன்ற கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுத்தாலும் சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் மோசமான மாதமாக இருக்கப்போகிறது. இது அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தையும், மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகள் ரிஷப ராசியினருக்கு எதிர்பார்த்த ஆபத்துகளை ஏற்படுத்தப்போகிறது. செவ்வாய் பெயர்ச்சி அவர்களுக்கு கடுமையான தீங்குகளை ஏற்படுத்தப்போகிறது. செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசியினரின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல், இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
இந்த மாதம் அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல, புதிய வியாபாரம் தொடங்குவதற்கு இது சாதகமான நேரமல்ல. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், இது உங்கள் சேமிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். மொத்தத்தில் அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசியினர் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
துலாம்
அக்டோபர் மாத கிரகப் பெயர்ச்சிகள் துலாம் ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகளை வழங்கப்போகின்றன. இந்த மாதம் அவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்காக பெரும் தொகையை செலவு செய்ய நேரிடும்.
எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன், ஒன்றுக்கு நூறு முறை ஆலோசிப்பது நல்லது. அவர்களின் தவறான முடிவுகளால் சமூகத்தில் அந்தஸ்தையும், மதிப்பையும் இழக்க நேரிடும். வாகனங்களை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும், நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
மகரம்
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகள் மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை ஏற்படுத்தப்போகிறது. இது அவர்கள் வாழ்க்கையில் மிகவும் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. மாதத்தின் பிற்பகுதி மிகவும் மோசமானதாக இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் இழப்பார்கள். மேலும் நெருங்கிய ஒருவரால் அவமதிப்பை சந்திக்க நேரிடும்.
தங்கள் உடல்நலத்தைப் பற்றி நினைத்து அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அவர்கள் தொழிலில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். இது அவர்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்களை அதிகரிக்கும். அடுத்த 31 நாட்களுக்கு துரதிர்ஷ்டம் அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
