Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்த 3 தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருக்கு பண விஷயத்தில் ரொம்பவும் ஆதரவா இருப்பாங்களாம்...
Numerology In Tamil: ஒருவர் பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒருவரது ராசியும், அந்நபரின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படுகிறது. எப்படி கிரகங்கள் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேப் போல் ஒருவர் பிறந்த தேதியும் அந்நபரின் வாழ்க்கையில் மற்றும் குணாதிசயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி எண்களை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம்.
இந்த எண் கணிதத்தில் 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்களும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. அதில் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரனுடன் தொடர்புடைய எண் தான் 6. எண் கணிதத்தில் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் பிறவியிலேயே சுக்கிரனின் ஆசியை பெற்றவர்கள். நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். மிகவும் அதிர்ஷ்டசாலிகள். குறிப்பாக இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர் மற்றும் மாமனார் மாமியாருக்கு அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். முக்கியமாக இந்த பெண்கள் தங்கள் கணவருக்கு அனைத்து சூழ்நிலைகளிலும் ஆதரவாக இருப்பார்கள்.
பணத்தை தாராளமாக செலவழிப்பர்
எண் கணிதத்தின் படி, இந்த 6 என்ற எண்ணிற்கு உரியவர்களின் ஆளுமை கவர்ச்சிகரமானதாக இருக்கும். நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். இவர்கள் பணம் செலவழிக்க சற்றும் தயங்கமாட்டார்கள். தாராளமாக பணத்தை செலவு செய்வார்கள். கையில் பணம் அதிகம் புரளும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக இவர்கள் நிறைய பயணம் செய்ய விரும்புவார்கள்.
கணவருக்கு ஆறுதலாக இருப்பர்
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் சற்று அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். மனம் வருந்தும்படி சின்ன விஷயங்கள் நடந்தாலும், இந்த பெண்கள் விரைவில் உணர்ச்சிவசப்பட்டு மோசமாக உணர்வார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொழில் வாழ்க்கையை சிறப்பாக நிர்வகிப்பார்கள். இதனால் இவர்கள் திருமணத்திற்கு பின் தங்கள் கணவருக்கு பண விஷயத்தில் ஆதரவாக இருப்பார்கள்.
இந்த தேதிகளில் பிறந்த பெண்களை திருமணத்திற்கு பின் தனது கணவரின் குடும்பத்தை தன்னுடனேயே வைத்துக் கொள்வார்கள். மேலும் இவர்கள் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார்கள். இவர்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் அமைதியானவர்கள். நிறைய இரக்க உணர்வைக் கொண்டவர்கள். முக்கியமாக இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தளவு முயற்சி செய்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











