Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்களை யாராலும் தோற்கடிக்க முடியாதாம்... இவங்க சாதிக்க பிறந்தவங்களாம்!
Numerology: ஜோதிட சாஸ்திரம் போலவே எண்கணிதமும் பிரபஞ்சத்தின் ரகசிய மொழியாக இருக்கிறது. எண்கணிதம் ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களின் ஆளுமையையும், குணாதிசயங்களையும் விளக்குகிறது.
ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவம் இருந்தாலும் சில எண்களில் பிறந்தவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள். குறிப்பாக சில எண்களில் பிறந்த பெண்கள், தங்கள் எண் கணித சக்திகளால் வழிநடத்தப்பட்டு, அவர்களின் துறைகளில் தோற்கடிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் மோதுவது என்பது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது. அது எந்தெந்த எண்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்த பெண்கள்
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே தலைராவாக பிறந்தவர்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் அவர்களை எந்த விஷயத்திலும தடுக்க முடியாதவர்களாக மாற்றுகிறத. அவர்கள் தங்களை நோக்கி வீசப்படும் சவால்களை தனிப்பட்டரீதியில் எடுத்துக்கொள்கிறாள், அனைவரையும் தங்களின் போட்டியாளர்களாகவே கருதுகிறார்கள். விவாதங்கள் அல்லது போட்டிகளில் அவர்களுடன் போட்டியிடுவது சிங்கத்துடன் மல்யுத்தம் செய்வது போன்றது, ஆரம்பத்தில் உற்சாக இருக்கும் ஆனால் முடிவில் வெற்றி எப்போதும் அவர்களின் பக்கமே இருக்கும்.
5, 14 மற்றும் 23 தேதிகளில் பிறந்த பெண்கள்
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் உச்சகட்ட சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள். எந்த விஷயத்திலும் விரைவாகவும், சமயோசிதமாகவும் செயல்படும் அவர்கள், சவாலான சூழ்நிலைகளில் செழித்து வளர்கிறார்கள். அது தன்னிச்சையான சாலைப் பயணமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கடினமான வேலையை முடிப்பதாக இருந்தாலும் சரி, அவர்களின் தகவமைப்புத் திறன் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத வலிமையையும், நன்மைகளையும் அளிக்கிறது.
8,17 மற்றும் 26 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் லட்சியத்தின் ராணிகள். அவர்களின் சிறப்பான திட்டமிடல் மற்றும் கூர்மையான கவனம் தலைமை அல்லது நிதி சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்கிறது. அவர்களின் எதிரில் இருப்பது எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும் சரி, போட்டியாளர்களாக யார் இருந்தாலும் சரி அவர்கள் மற்றவர்களை விட எப்போதும் ஒரு படி மேலே இருப்பார்கள்.
3, 12, 12 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வெளித்தோற்றத்திற்கு விளையாட்டுத்தனமானவர்களாகத் தோன்றலாம், அதைவைத்து அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் பல திறமைகள் கொண்டவர்கள் மற்றும் வலுவான படைப்பாற்றல் கொண்டவர்கள். அவர்களின் வசீகரமும், புத்திசாலித்தனமும் அவர்களை ஒரு சமூக பட்டாம்பூச்சியாக மாற்றுகின்றன, ஆனால் சவால் என்று வரும்போது அவர்கள் தங்கள் திறமையை தங்களின் ஆயுதமாக மாற்றுகிறார்கள். குறிப்பாக கலைத்துறைத் தொடர்பான போட்டிகள் என்று வரும்போது அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.
எண் கணிதத்தில், இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே சக்தியின் உருவமாக இருப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பலங்கள் உள்ளன, அவை அவர்களுடன் போட்டியிடுவதை மற்றவர்களுக்கு ஆபத்தானதாக மாற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
