நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்த பெண்கள் யாராலும் வெல்ல முடியாதவர்களாம்... அவங்க கணவரையும் சேர்த்துதான்!

Numerology: ஜோதிடம் போலவே எண்கணிதமும் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள பல நூற்றாண்டுகளாக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு ஜோதிட முறையாகும். எண் கணிதத்தின்படி, ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களைப் பற்றி பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்த பெண்கள் தன்னம்பிக்கை, தைரியம், வெற்றி மற்றும் குறைவிலா செல்வம் போன்ற மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Numerology Women Born On These Birth Dates Are Undefeatable in Tamil

இந்த தேதிகளில் பிறந்த பெண்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாராலும் ஜெயிக்க முடியாது. அவர்களின் வெற்றியும், முன்னேற்றமும் யாராலும் தடுக்க முடியாதவை. இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்த பெண்கள் யாராலும் வெல்ல முடியாதவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 1

அனைத்து மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்த பெண்களின் விதி எண் 1. இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அனைத்து விஷயங்களிலும் முதலிடத்தில் இருப்பார்கள். மேலும் அவர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள், அதற்கான தன்னம்பிக்கையும். தைரியமும் அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் எந்த பெரிய பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள். அதுமட்டுமின்றி, அவர்களின் ஆளுமையும் மற்றவர்களை விட சக்திவாய்ந்தது.

அவர்கள் அனைத்து விஷயங்களையும் மன உறுதியுடன் செய்கிறார்கள், அதனால் அவர்களின் அனைத்து இலட்சியங்களும் நிறைவேற்றப்படுகின்றன. அவர்கள் அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு துல்லியமாக செய்யக்கூடியவர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இருக்கும். தங்கள் வாழ்க்கைத்துணைக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்.

Numerology Women Born On These Birth Dates Are Undefeatable in Tamil

எண் 4

அனைத்து மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 4 ஆகும். இந்த எண்ணின் கீழ் பிறந்த பெண்கள் அனைத்து விஷயங்களையும் பொறுப்புடன் கையாளுகிறார்கள். அவர்களின் எதார்த்த நடைமுறையும், பொறுப்புணர்வும் அனைத்து விஷயங்களையும் சாதகமாக மாற்றுகிறது. இந்த அணுகுமுறை அவர்கள் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் சமநிலையைக் கடைபிடிப்பார்கள்.

4 என்ற எண்ணைக் கொண்டவர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முடிவெடுப்பதில் முன்னணியில் இருப்பார்கள். அவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ விரும்பாமல் இருக்கலாம். மேலும் அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அவர்கள் தங்கள் ஆசைகளுக்காக கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் இலக்குகள் கடினமாக இருந்தாலும், அவர்கள் அதை நிச்சயம் அடைவார்கள்.

எண் 8

அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 8 ஆகும். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பத்தை முழுமையாக செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தாங்கள் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் முழுமையாகக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.

தங்கள் வாழக்கைத்துணையின் மீதான அவர்களின் அன்பு மிகவும் வலுவாக இருக்கும். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வாழ்க்கையில் தெளிவான புரிதலுடனும், திட்டங்களுடனும் காய்களை நகர்த்துவார்கள். அவர்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயத்திலும் மிகவும் நேர்மறையான மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்களின் இந்த அணுகுமுறை வாழ்க்கையில் அவர்களை நினைத்தை அடைய உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, April 7, 2025, 14:54 [IST]
Desktop Bottom Promotion