Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க... வாழ்வில் எந்த மாதிரியான சவால்களை சந்திப்பீங்க-ன்னு சொல்றோம்...
Numerology: எண்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த எண்களை மையமாக கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதி அந்நபரைப் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தும். அதில் அந்நபரின் எதிர்காலம், நோக்கம், சவால்கள், குணாதிசயங்கள், நல்லது கெட்டது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நீங்கள் உங்கள் பிறந்த தேதிக்கு பின் ஏதாவது ஒரு அர்த்தம் உள்ளதா என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? ஒருவரின் பிறந்த தேதியானது இந்த வாழ்க்கையில் அந்நபர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை கொண்டு செல்வதாக சிலர் நம்புகிறார்கள்.

மேலும் ஒருவர் பிறந்த தேதியானது கடந்த கால வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நீங்கள் உங்களின் பிறந்த தேதி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது, எந்த மாதிரியான சவால்கள், தேடல்களைக் கொண்டிருப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகள்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களின் ஆன்மா அதன் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய கடந்த காலத்தில் போராடியிருக்கலாம். அதன் விளைவாக இந்த ஜென்மத்தில் இன்னும் அந்த தேடல் இருக்கலாம். மேலும் நீங்கள் சந்திக்கும் சவால்கள் பணத்தை சுற்றி இருக்கலாம் அல்லது வாழ்க்கையில் சரியான பாதையை கண்டுபிடிப்பதாக இருக்கலாம்.
7, 16, 25 ஆகிய தேதிகள்
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், நீங்கள் கடந்த வாழ்க்கையில் இலக்கிற்கு அருகில் வந்து அதை அடையாமல் இருந்திருப்பீர்கள். இதனால் இந்த வாழ்க்கையில் விஷயங்கள் கடினமாக இருக்கும் போது அதை விட்டுவிடுவது போன்று நீங்கள் உணரலாம். ஆனால் அதை செய்யாமல், நம்பிக்கை கொண்டு முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயல வேண்டும். மேலும் இந்த வாழ்க்கையில் நீங்கள் உங்களின் வலிமையை சோதித்து, வாழ்க்கையில் மீண்டு வருவது எப்படி என்னும் பாடத்தை கற்பிக்கும் ஒருவரை சந்திப்பீர்கள்.
3, 4, 6, 24, 30 ஆகிய தேதிகள்
3, 4, 6, 24, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் கடந்த கால வாழ்க்கை காதல் அல்லது பழிவாக்குவதில் இருந்திருக்கலாம். இந்த வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பலர் உங்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். இந்த கர்ம உறவுகளின் மூலம் இந்த ஜென்மம் முழுவதும், உங்கள் கடந்தகால வாழ்க்கையில் உங்களால் இணைக்க முடியாத நபரைத் தொடர்ந்து தேடலாம்.
எனவே நண்பர்களே! நீங்கள் எப்போது பிறந்தீர்கள் எப்போது முக்கியமல்ல. ஒவ்வொரு தேதியும் அதன் தனித்துவமான கர்ம பாடத்தைக் கொண்டுள்ளது. எனவே உங்கள் வாழ்க்கையில் உள்ள சவால்களைப் புரிந்து கொண்டால், அது உங்களின் வளர்ச்சிக்கு உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications