Latest Updates
-
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்..
2026-ல் பணமும், வெற்றியும் குவியணுமா? அப்ப உங்க பிறந்த தேதிப்படி இன்னிக்கு இத பண்ணுங்க...
New Year 2026 Numerology: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2026 புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த புத்தாண்டு சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க புத்தாண்டின் முதல் நாளில் கோவிலுக்கு செல்வது, தானம் செய்வது போன்ற ஒருசில நல்ல விஷயங்களை செய்வோம். இது தவிர, இந்த ஆண்டு முழுவதும் நன்றாக இருக்க, ஆண்டின் முதல் நாளில் ஒருசில பரிகாரங்களையும் செய்வார்கள்.
அந்த வகையில் எண் கணித்தின் படி, புத்தாண்டின் முதல் நாளில் ஒருவரது பிறந்த தேதியின் அடிப்படையில், வெற்றி மற்றும் வளர்ச்சியைச் செயல்படுத்த, ஆண்டின் முதல் நாளில் செய்ய வேண்டிய ஒரு சிறப்புச் செயல் உள்ளது. இதுக்குறித்து ஜோதிடரான ஆஞ்சல் குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டின் முதல் நாளில் பிறந்த தேதிப்படி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் தாயிடம் இருந்து ஒரு வெள்ளை செயினை வாங்கி அணிவதன் மூலம், தெய்வீக அதிகாரம் செயல்படுத்தப்படும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் படுக்கைக்கு அருகில் ஒரு பெளலில் நீரை வைப்பதன் மூலம், 2025-ல் சந்தித்த உணர்ச்சிரீதியான எச்சங்கள் அழிக்கப்பட்டு, புதிய ஆண்டு சிறப்பாக இருக்கும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகயில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் மதியத்திற்கு மஞ்சள் நிற உணவுப் பொருட்களை தானம் செய்வதன் மூலம் குருபகவானின் ஆசியால் அதிர்ஷ்ட கதவு திறக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் தங்களின் பணம் வைக்கும் பர்ஸை மாற்றுவது நல்லது. இப்படி செய்வதனால் பர்ஸில் பணம் அதிகம் சேரும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் ஒரு பேப்பரில் தங்களின் ஆசையை எழுதுவதன் மூலம், புதனின் அருளால் அது விரைவில் நிறைவேறும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் சுக்கிரனைச் செயல்படுத்த உங்களுக்கு பிடித்ததை செய்து உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் செல்வமும், ஆடம்பரமும் அதிகரிக்கும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் ஒரு விளக்கை ஏற்றி, அதன் முன் அமைதியாக அமர்வதன் மூலம், கேதுவின் ஆற்றல் செயல்படுத்தப்படும். ஏனெனில் மனம் அமைதியாக இருக்கும் போது தான் கேது சிறப்பாக செயல்படுவார்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடுகு எண்ணெயில் தங்களின் நிழலை பார்த்து, அதை சனி பகவானுக்கு படைப்பதன் மூலம், சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளும், அழுத்தங்களும் குறையும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு புத்தாண்டின் முதல் நாளை உடற்பயிற்சியுடன் தொடங்க வேண்டும். இதனால் 2026-ல் செவ்வாயால் பல நன்மைகளைப் பெறலாம்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு 2026 ஆம் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டுமானால், மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு உங்கள் பிறந்த தேதிக்கேற்ப செயல்களை செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications