Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
நீங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க... நீங்க எதிர்காலத்தில் எப்படிப்பட்ட அம்மாவா இருப்பீங்கனு நாங்க சொல்றோம்...
Numerology: பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு எப்படி முற்றிலும் மாறுகிறதோ அதேபோல குழந்தை பிறந்த பிறகு அவர்களின் வாழ்க்கை புதிய பரிமாணத்திற்குச் செல்கிறது. அம்மா-குழந்தை உறவு என்பது உலகின் மிகவும் அற்புதமான உறவுகளில் ஒன்றாகும். அனைத்து அம்மாக்களுமே தங்கள் குழந்தைகளுக்கு நல்லது மட்டுமே நினைக்கிறார்கள். அவர்களின் நன்மைக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
அனைத்து அம்மாக்களுமே நல்லவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட ஸ்டைல் இருக்கும். இந்த ஸ்டைல் அவர்களின் ஆளுமையை பொறுத்து மாறுபடும். ஒருவரின் ஆளுமையை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த தேதி முக்கியப்பங்கு வகிக்கிறது. பிறந்த தேதியின் அடிப்படையில் ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமான அம்மாவாக இருப்பார்கள். இந்த பதிவில் பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவர் எப்படிப்பட்ட அம்மாவாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 1
அனைத்து மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் சிறந்த அம்மாக்களாக இருப்பார்கள், அவர்கள் மிகவும் உறுதியானவர்கள் மற்றும் மிகவும் கண்டிப்பானவர்கள். எனவே தங்கள் குழந்தைகள் அனைத்து விஷயத்தையும் தங்களிடம் கேட்டு அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
எண் 2
அனைத்து மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29. அவர்கள் தான் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களின் வளர்ப்பில் நிறைய நாடகங்கள் மற்றும் அழுகை நிறைந்திருக்கும். அவர்கள் காட்டும் அளவிற்கு தங்கள் குழந்தைகளும் தங்கள் மீது பாசம் காட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள், இல்லையெனில் அவர்களின் இதயம் நொறுங்கிவிடும்.
எண் 3
அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அம்மாக்களாக இருப்பார்கள், அவர்களின் குழந்தைகள் அனைத்தையும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் தங்களால் முடிந்த சிறந்த வாழ்க்கையை அவர்களின் குழந்தைகளுக்கு வழங்குவதில் உறுதியாக இருக்கிறார்கள், தங்கள் குழந்தையின் ஒவ்வொரு முயற்சியிலும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் வழிமுறைகளைப் குழந்தைகள் பின்பற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
எண் 4
அனைத்து மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 13 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் அனைத்து நல்ல விஷயங்களும் நடக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாக தொடர்புகொள்வது கடினம். இந்த தொடர்பு இடைவெளிகளால், அவர்கள் நன்றாக இருக்க விரும்பினாலும், அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் நெருக்கமாக இருக்க முடியாது.
எண் 5
அனைத்து மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள் அற்புதமான அம்மாவாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளின் நண்பர்களாக இருக்கும் வேடிக்கையான மற்றும் பொறுப்பான அம்மாவாக இருப்பார்கள். அவர்களின் குழந்தைக்கு 10 வயது என்றால், அவர்களும் 10 வயது குழந்தை போலவே குழந்தையிடம் பழகுவார்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்களை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
எண் 6
அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள், உலகின் எந்த எல்லைக்கும் சென்று தங்கள் குழந்தையின் பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுவார்கள். இருப்பினும், தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாடு கொண்ட அம்மான இவர்கள் அவர்களைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.
இது குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அவர்கள் குழந்தைகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் தங்கள் குழந்தையின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்யும் அனைத்தும் அவர்கள் குழந்தையின் நன்மைக்குதான், ஆனால் இது அவர்களின் குழந்தைகளுக்கு அதிக விரக்தியை ஏற்படுத்தும்.
எண் 7
அனைத்து மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் அடிக்கடி நிகழும் மனநிலை மாற்றங்கள் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் குழந்தைக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் அவர்கள் சில சமயங்களில் எந்த அக்கறையும் இல்லாமல் நடந்து கொள்வார்கள்.
எண் 8
அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பான அம்மாவாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகள் மீது மிகவும் அக்கறைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் தேவைகளை தங்களின் தேவைகளை விட முக்கியமானதாகக் கருதுவார்கள்.
எண் 9
அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் ஆபத்தான அம்மாவாக கருதப்படுகிறார்கள். இந்த தேதிகள் பிறந்த அம்மாக்கள் ஹிட்லருக்கு சமமானவர்களாக கருதப்படுகிறார்கள், அதாவது அவர்களின் குழந்தைகள் எப்போதும் அவர்களுடைய பேச்சை மட்டும்தான் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இல்லையெனில் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். குழந்தைகளை சரியானவர்களாக வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் எல்லைமீறி செல்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












