Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
நியூமராலஜி படி, உங்க பிறந்த தேதிப்படி இந்த பொருட்களை உங்க பர்ஸில் வெச்சுக்கோங்க... பணம் குவியும்..
Numerology: நாம் ஒவ்வொருவருமே பணம் சம்பாதிப்பதற்காகவே அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும், அந்த பணம் கையில் நிலைத்திருப்பதில்லை.
ஏதாவது ஒரு செலவு வந்தவாறு இருக்கும். இதன் மூலம் கையில் பணம் இல்லாமல், கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். நீங்கள் இப்படியான சூழ்நிலையை எப்போதும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் ஜோதிடம் கூறும் சில விஷங்களைப் பின்பற்றுங்கள்.

அதுவும் ஒருவரது பிறந்த தேதியின் படி, ஒருசில பொருட்கள் பணம் வைக்கும் பையில் வைத்திருந்தால், பணம் நிலைத்திருப்பதோடு, பெருகும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த வகையான பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்பதை இப்போது காண்போம். உங்கள் பிறந்த தேதிக்கு எந்த பொருளை பர்ஸில் வைத்திருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எண் 1
ஒரு மாதத்தில் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணிற்கு உரியவர்கள் தங்கள் பணப்பையில் ஒரு செம்பு நாணயத்தை வைத்திருக்க வேண்டும். இப்படி வைத்திருப்பதன் மூலம் மரியாதை, வெற்றி மற்றும் செழிப்பை அதிகரிக்கும். மேலும் பணப்பையில் உள்ள பணம் அப்படியே இருக்கும் மற்றும் செலவுகள் குறையுமென நம்பப்படுகிறது.
எண் 2
ஒரு மாதத்தில் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் பணப்பையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது நல்லது. இதன் மூலம் பணப்பையில் பணம் நிலைத்திருக்கும் மற்றும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படாது. முக்கியமாக திடீர் செலவுகள் குறையும்.
எண் 3
ஒரு மாதத்தின் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் செலவைக் குறைக்கவும், பணப்பையில் பணம் அதிகம் சேரவும் குங்குமப்பூவை மஞ்சள் காகிதத்தில் வைத்து மடித்து, பணப்பையில் வைத்திருப்பது நல்லது. இதனால் செல்வம் பெருகும் மற்றும் கடன் பிரச்சனைகள் குறைவதாக நம்பப்படுகிறது.
எண் 4
ஒரு மாதத்தின் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் கைப்பை அல்லது பணப்பையில் பார்லியை வைத்திருப்பது நல்லது. ஜோதிடத்தின் படி, பார்லி ராகுவின் மீது எதிர்மறையை நீக்கி, திடீர் செலவுகளைக் குறைக்கும். அதுவும் பச்சை நிற துணியில் வைத்து கட்டி, பணப்பையில் வைத்திருந்தால், நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
எண் 5
ஒரு மாதத்தின் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் பணப்பையில் துளசி இலைகளை வைத்திருப்பது நல்லது. துளசி புதன் கிரகத்துடன் தொடர்புடையது. எனவே இந்த துளசியை கைப்பையில் வைத்திருக்கும் போது, அது மனதை கூர்மைப்படுத்துவதோடு, நிதி நிலைமையையும் மேம்படுத்தும். இந்த துளசி இலைகளை தினமும் மாற்ற வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
எண் 6
ஒரு மாதத்தின் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் பணப்பையில் உலர்த்த ரோஜாக்களை வைத்திருப்பது நல்லது. இது நல்ல நிதி ஆதாயத்தை தந்து, கடன் பிரச்சனைகளைப் போக்குவதாக நம்பப்படுகிறது.
எண் 7
ஒரு மாதத்தின் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தவரின் போட்டோவை பணம் வைக்கும் பையில் வைத்திருப்பது நல்லது. இது கேது கிரகத்தை சமநிலைப்படுத்தும். மேலும் இப்படி வைத்திருந்தால், பணத்திற்கு எந்த பஞ்சமும் வராது.
எண் 8
ஒரு மாதத்தின் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகள்ல் பிறந்தவர்கள் தங்கள் பணப்பையில் எப்போதும் ஒரு நாணயத்தை வைத்திருக்க வேண்டும். ஜோதிடத்தின் படி, இது சனி கிரகத்தை பலப்படுத்தும். மேலும் இவ்வாறான செயல் தொழில் மற்றும் நிதி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிவதாக ஜோதிடம் கூறுகிறது.
எண் 9
ஒரு மாதத்தின் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்வர்கள் தங்கள் பணப்பையில் சிவப்பு நிற கயிற்றினை வைத்திருப்பது நல்லது. அதுவும் அந்த கயிற்றினை பணப்பையில் வைக்கும் முன், அதில் 9 முடிச்சுக்களை போட வேண்டும். இந்த சிவப்பு நிற கயிறு செவ்வாய் கிரகத்தை பலப்படுத்தி, உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











