Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? வரப்போகிற 2026 உங்களுக்கு என்ன நடக்கபோகுதுனு நாங்க சொல்றோம்...!
Numerology Predictions 2026: இன்னு மூன்று வாரங்களில் 2026 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. 2026 ஆம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களை வழங்குகிறது. அனைவரின் வாழ்க்கையிலும் வரவிருக்கும் ஆண்டில் சில மாற்றங்கள் ஏற்படும். நியூமராலஜி படி வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் உங்கள் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.
உங்களின் பிறந்த தேதி உங்கள் வாழ்க்கையின் பாதையை உருவாக்குகிறது. நீங்கள் பிறந்த தேதி உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் பெறவிருக்கும் ஆளுமையைக் கண்டறிய உதவுகிறது. இந்த எண்கள் உங்கள் எதிர்காலத்தையும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கணிக்கின்றன. எண் கணித கணிப்புகளின் படி வரவிருக்கும் ஆண்டில் உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் உங்கள் திருமண வாழ்க்கை, நிதிநிலை, தொழில் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எண் 1
அனைத்து மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வரவிருக்கும் ஆண்டு மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல தொழில் மாற்றம் ஏற்படும், இதன் மூலம் நீங்கள் பெரும் லாபம் சம்பாதிப்பீர்கள். சுற்றுச்சூழல் எதிர்மறை காரணமாக ஆண்டின் நடுப்பகுதியில் கல்வி, சுகாதாரம் மற்றும் வணிகத்தில் சில சண்டைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆண்டின் இறுதிக்குள் நீங்கள் உங்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
எண் 2
அனைத்து மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 தேதிகளில் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும், உணர்திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள், இந்த புத்தாண்டில் உங்கள் உணர்ச்சி மற்றும் உணர்திறன் தன்மை காரணமாக நீங்கள் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். உங்களின் மிகவும் உணர்ச்சிவசப்படும் தன்மை காரணமாக திருமணம் மற்றும் குடும்ப உறவுகளைப் பராமரிப்பதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அதைத் தவிர, உங்கள் கல்வி, தொழில் மற்றும் வணிகம் இந்த புத்தாண்டில் நற்பலன்களை அனுபவிக்கலாம். இந்தப் புத்தாண்டில் நீங்கள் பெரும் செல்வத்தை ஈட்ட ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.லன்களைப் பெறுவீர்கள்.
எண் 3
அனைத்து மாதத்திலும் 3, 12, 30 மற்றும் 21 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த புத்தாண்டு லாபமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் நீங்கள் ஒரு சிறந்த நேரத்தை அனுபவிப்பீர்கள். புத்தாண்டில் உங்கள் குடும்ப உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் இருக்கும். ஆனால் உங்கள் விருப்பப்படி அனைத்து விஷயங்களைச் செய்யும் பழக்கம் உங்களிடம் உள்ளது, மேலும் இது உங்கள் கல்வி, தொழில் மற்றும் வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் தொழில், வணிகம் மற்றும் கல்வியில் வளர உதவும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது.
எண் 4
அனைத்து மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்க்கையின் அனைத்து துறையிலும் ஏற்ற தாழ்வுகளால் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில், ஆண்டின் தொடக்கத்தில், சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும், ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் சூழல் சகஜமாகும். நீங்கள் கணிக்க முடியாத ஆளுமையைக் கொண்டிருக்கிறீர்கள், இது உங்கள் தொழில், வணிகம் மற்றும் நிதியில் ஏற்ற, இரக்கங்களுக்கு வழிவகுக்கும். இந்த ஆண்டில் உங்கள் தொழில், கல்வி மற்றும் வணிகம் குறித்து சில முக்கியமான முடிவுகளை எடுக்க நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எண் 5
அனைத்து மாதத்திலும் 5, 14 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் நண்பர்கர்களிடம் மிகவும் நட்பாகவும், விசுவாசமாகவும் இருப்பார்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உறவுகளைப் பேண நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். ஆனால் இந்த ஆண்டு இந்த உறவுகளைக் கையாள்வதில் சில சிக்கல்கள் ஏற்படலாம், குறிப்பாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை உறவுகளில் பிரச்சினைகள் எழலாம். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
எண் 6
அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமை மற்றும் படைப்புத் திறன்களைக் கொண்டுள்ளனர். இந்த புத்தாண்டு உங்கள் சிறந்த ஆளுமை மற்றும் படைப்பாற்றல் உங்களுக்கு வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகளைத் தரும். உங்கள் கடின உழைப்பு மற்றும் கலைத்திறன் மூலம் கல்வி, ஆரோக்கியம், தொழில் மற்றும் பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. நீங்கள் எப்போதும் கவனத்தின் மையமாக இருந்திருக்கிறீர்கள், ஆனால் இந்த ஆண்டு நீங்கள் உங்களின் சில முக்கியத்துவத்தை இழக்க நேரிடலாம்.
எண் 7
அனைத்து மாதத்திலும் 7, 16 மற்றும் 25 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். ஆண்டின் தொடக்கத்தில், உங்கள் வேலையில் பதவி உயர்வு அல்லது பெரிய வணிக வெற்றியைப் பெற உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வணிகத்தில் நீங்கள் பெரும் லாபத்தை சம்பாதிப்பீர்கள். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில், கவனமின்மையால் உங்கள் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் சில சிக்கல்களைச் சந்திப்பீர்கள். திருமண வாழ்க்கையில், புரிதல் சிக்கல்கள் காரணமாக நீங்கள் சில சிறிய பிரச்சினைகளை சந்திக்கலாம், ஆனால் அவற்றை எளிதில் தீர்க்க முடியும்.
எண் 8
அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்புகள் நிறைந்ததாகவும், வாழ்க்கையில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் விதமாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தினருடனும், அன்புக்குரியவர்களுடனும் உங்கள் வாழ்க்கையின் மிக அற்புதமான நேரத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். இந்த ஆண்டு திருமண வாழ்க்கை உறவுகள் மற்றும் குடும்ப உறவுகளில் நிலைத்தன்மையை அனுபவிப்பீர்கள். மாணவர்களுக்கு, இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானது, ஏனெனில் அவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த புத்தாண்டில் நீங்கள் பெரிய அளவில் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.
எண் 9
அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 28 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு கலவையான பலன்களை அனுபவிப்பார்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் விரும்பும் நபர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் ஆரோக்கியம், நிதிநிலை, தொழில், வணிகம் போன்ற அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே இது அவர்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












