Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
Numerology Predictions 2025: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். எண் கணிதத்தின் படி, 2025 ஆம் ஆண்டு சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்க போகிறது. எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்கள் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டு தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும். உதாரணமாக, ஒருவரது பிறந்த தேதி 24 என்றால் அந்நபருக்குரிய எண் 2+4 =6 ஆகும்.
ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டின் கூட்டுத்தொகை 9. இந்த 9 ஆம் எண்ணின் அதிபதி செவ்வாய். எனவே இந்த 2025 ஆம் ஆண்டில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். செவ்வாயின் ஆதிக்கத்தால், 2025 ஆம் ஆண்டில் சில தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது எண் கணிதத்தின் படி, 2025 ஆம் ஆண்டில் எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

எண் 4
ஒரு மாதத்தின் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மங்களகரமான ஆண்டாக இருக்கும். பொதுவாக எண் 4-ன் அதிபதி ராகு. இந்த ராகுவால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் சில நேரங்களில் சிக்கல்களால் அவதிப்படுவார்கள். ஆனால் 2025 ஆம் ஆண்டு இந்த எண்ணிற்கு உரியவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். கனவு நனவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
எண் 6
ஒரு மாதத்தின் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும். எண் 6-ன் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் ஈர்க்கும் சக்தியைக் கொண்டது. எனவே இந்த ஆண்டு இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரிய சாதனையை புரிவார்கள். வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், இறுதியில் அனைத்தும் சரியாகிவிடும்.
எண் 8
ஒரு மாதத்தின் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முன்னேற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். எண் 8-ன் அதிபதி சனி. எனவே சனியின் தாக்கத்தால் இதுவரை முழுமையடையாத வேலை இந்த ஆண்டில் வெற்றிகரமாக முடிவடையும். இருப்பினும் அதற்கு கொஞ்சம் கடின உழைப்பு தேவைப்படும். பொறுமையுடன் இருந்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அற்புதமானதாக இருக்கும். எண் 9-ன் அதிபதி செவ்வாய். இவர் தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாவார். இதனால் இதுவரை முழுமையடையாமல் நிலுவையில் இருந்த வேலைகள் இந்த ஆண்டில் வெற்றிகரமாக முடிவடையும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications