உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...

Numerology Predictions 2025 In Tamil: 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இப்படி ஒருவரது எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை அந்நபரின் ராசியைக் கொண்டு அறிவோம்.

ஆனால் ஒருவரது ராசியை வைத்து மட்டுமின்றி, ஒருவரின் பிறந்த தேதியைக் கொண்டும் அந்நபரின் எதிர்காலத்தைக் கணித்து கூற முடியும். அப்படி பிறந்த தேதியைக் கொண்டு எதிர்காலத்தைக் கணிப்பும் முறை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்களானது ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும்.

Numerology Predictions 2025 By Date Of Birth In Tamil

எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒருவரது பிறந்த தேதிப்படி வருகிற 2025 ஆம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

எண் 1

1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் புதிய ஆற்றலை உணர்வார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலக வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மக்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் இந்த ஆண்டு கவனமாக செயல்பட வேண்டும். இந்த ஆண்டில் எவ்விதமான முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது. நிதி ரீதியாக இந்த ஆண்டு நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

எண் 2

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமானவர்கள் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எண் 3

3, 12, 21, அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த ஆண்டு இந்த தேதிகளில் பிறந்தவர்களின் சில முக்கியமான வேலைகள் தடைபடலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் மன அமைதி கிடைக்கும். மாணவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடினமாக உழைப்பீர்கள். காதலைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு சாதாரணமாக இருக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். பணிபுரிபவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்கலாம். இதனால் நிதி நிலை பலவீனமாகக்கூடும்.

எண் 4

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் நீண்ட நாள் ஆசைகள் இந்த ஆண்டில் நிறைவேறும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் போட்டிகளில் வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். சமூக சேவை, ஆட்டோமொபைல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன்களைத் தரும். வணிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை உயரும். திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும்.

எண் 5

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். இந்த ஆண்டு உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்களை சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் தங்கள் மீது சற்று கவனம் செலுத்த வேண்டும். நிதி ரீதியாக, இந்த ஆண்டு கலவையாக இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும்.

எண் 6

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

எண் 7

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல முன்னேற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும். திருமணமானவர்கள் சில மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடத்தில் பொறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும்.

எண் 8

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டில் நடைமுறை வாழ்க்கையை வாழ முயற்சி செய்ய வேண்டும். காதல் திருமணம் செய்ய வாய்ப்புக்களும் உள்ளன. இந்த ஆண்டு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணிபுரிபவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைப்பதோடு, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். மாணவர்கள் தேர்வில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.

எண் 9

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலையை உயர்த்த நினைத்தால், முதலில் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆனால் மாணவர்கள் இந்த இந்த ஆண்டு கடினமாக உழைக்க வேண்டும். அப்படி கடினமாக உழைத்தால், நல்ல முடிவுகளைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஆனால் கண் சம்பந்தமான சில பிரச்சனைகள் வரலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion