Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
நியூமராலஜியில் இந்த 6 எண்கள் சக்திவாய்ந்த எண்களாம்... இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்...!
Numerology: எண்கணிதத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு மாய முக்கியத்துவம் உள்ளதாக ஒரு பழங்கால நம்பிக்கை கூறுகிறார். எண்கணிதத்தில் குறிப்பிட்ட எண்களுக்கு அசாதாரண சக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த எண்கள், ஒருவரது வாழ்க்கையில் இருக்கும் போது அல்லது பயன்படுத்தப்படும் போது, அவர்களின் விதியை மாற்றும் என்று நம்பப்படுகிறது.
இந்த பதிவில் எண்கணிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த எண்கள் என்னென்ன மற்றும் அந்த எண்களில் உள்ள சிறப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 1
எண் 1 சுதந்திரம், தலைமைத்துவம் மற்றும் தனித்துவம் போன்ற சிறப்பு குணங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த சக்திவாய்ந்த எண் பெரும்பாலும் புதிய தொடக்கங்கள் மற்றும் வெற்றியை அடைவதற்கான உந்துதலுடன் தொடர்புடையது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் லட்சியம், மனஉறுதி மற்றும் சவால்களை மீறி முன்னேறுவதற்கான தைரியத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணால் ஆளப்படுபவர்கள் இயற்கையாகவே தலைவர்களாகவும் மற்றும் கண்டுபிடிப்பாளர்களாகவும் இருப்பார்கள்.
எண் 7
உலகின் பல கலாச்சாரங்களில் புனிதமான எண்ணாகக் கருதப்படும் எண் 7 ஞானம், உள்ளுணர்வு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இது அறிவு, இலட்சியம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது. நியூமராலஜி படி எண் 7 உடன் தொடர்பு கொண்டவர்கள் வாழ்க்கையின் மர்மங்களைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் பிரபஞ்சத்துடன் ஆழமான தொடர்பைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
எண் 11
எண் கணிதத்தில் 11 ஏஞ்சல் எண் என்று அழைக்கப்படுகிறது. எண் 11 ஆன்மீக ஆற்றல், உள்ளுணர்வு மற்றும் உத்வேகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது ஒரு சக்திவாய்ந்த அதிர்வைக் கொண்டுள்ளது, இந்த எண் நேர்மறை ஆற்றலை பரப்பவும், நுண்ணறிவுகளை பெறவும் உதவுகிறது. எண் 11 ஆல் செல்வாக்கு பெற்றவர்கள் பெரும்பாலும் தொலைநோக்கு பார்வையாளர்களாகவும் மற்றும் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்குபவர்களாக காணப்படுகிறார்கள்.
எண் 22
11-யை போலவே, எண் 22-ம் எண் கணிதத்தில் தேவதை எண்ணாகக் கருதப்படுகிறது, இது கனவுகளை நிறைவேற்றும் சக்தியைக் குறிக்கிறது. இது தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நீடித்த தாக்கத்தை உருவாக்கும் திறனைக் குறிக்கிறது. இந்த சிறப்பு எண்ணுடன் தொடர்புடையவர்கள் வெற்றிக்கான மகத்தான ஆற்றலையும், உலகில் அவர்களின் அடையாளத்தை உருவாக்கும் திறனையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
எண் 8
எண் கணிதத்தில் செழிப்பு, மிகுதி மற்றும் பொருள் வெற்றியைக் குறிக்கும் எண்ணாக 8 உள்ளது, குறிப்பாக எண் 8 நிதி மற்றும் தொழில் முன்னேற்றங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது. இது சாதனை, அதிகாரம் மற்றும் செல்வத்தை வெளிப்படுத்தும் திறனைக் குறிக்கிறது. இந்த எண்ணுடன் இணைந்தவர்கள் வணிகம் மற்றும் நிதி நிர்வாகத்திற்கானவேலையில் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கான தகுதி உடையவர்கள் என நம்பப்படுகிறது.
எண் 9
அன்பு, இரக்கம் மற்றும் தன்னலமற்ற தன்மையைக் குறிக்கும் எண் 9, எண் கணிதத்தில் மகத்தான சக்தியைக் கொண்டுள்ள எண்ணாக கருதப்படுகிறது. இந்த எண் தன்னலமற்ற சேவையையும், உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் அல்லது எண்ணுடன் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் ஆழ்ந்த பச்சாதாபம் மற்றும் மற்றவர்களை மேம்படுத்துவதற்கான வலுவான விருப்பத்தால் இயக்கப்படுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












