Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த தேதியில் பிறந்தவர்கள் மற்றவர்களை கையாளுவதில் சிறந்தவர்களாக இருப்பார்களாம்..!
எண் கணிதம் என்பது ஒரு நபரின் குணாதிசயத்தை பிறந்த தேதியின் அடிப்படையில் கணித்து சொல்லுவதுதாகும்.. இதுவும் ஜோதிடத்தைபோலவே நம் எதிர்காலத்தை பகுப்பாய்வு செய்யும் அறிவியல் ஆகும். எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட எண்கள் மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் பிறந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
இவற்றின் அடிப்படையில் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை எண் கணித நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால் எண் கணிதத்தில் சில எண்களுக்கு சிறப்பு பண்புகள் உள்ளன. குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் தந்திரமானவர்கள்.. அவர்கள் மைண்ட் கேம் சிறப்பாக விளையாடுவார்கள்.. அவர்கள் மற்றவர்களை ஈஸியாக கையாள தெரிந்தவர்கள்.. அவர்கள் யாராக இருந்தாலும் எளிதாக ஆதிக்கம் செலுத்துவார்களாம்.. இந்த குணநலன்களுடன் பிறந்தவர்கள் எந்த தேதி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்லலாம் வாங்க..

எண் கணிதம்: 5ஆம் தேதி பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும் 5ஆம் தேதியில் பிறந்தவர்கள் தைரியம் மற்றும் இயற்கையாகவே எதிலும் ஆர்வமுள்ளவர்கள். எண் கணிதத்தில் எண் 5 சுதந்திரம், உணர்திறன், தந்திரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆனால் சில நேரங்களில் அவர்கள் தங்கள் அணுகுமுறைகளையும் நடத்தைகளையும் மாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு மன தந்திரங்களை பயன்படுத்தி விளையாடுவார்கள்.. தந்திரக்காரர்கள்..
எண் கணிதம்: 2வது தேதியில் பிறந்தவர்கள்
எந்த சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறன், மனவலிமை கொண்டவர்களாக இருப்பார்களாம்.. ஆனால் எண் கணிதத்தில் எண் 2 நல்லிணக்கம், சமநிலையை (சமநிலைப்படுத்துதல்), நட்பு ஆகிவற்றை குறிக்கிறது. இந்த தேதியில் பிறந்தவர்கள் சூழ்நிலைகளை கட்டுப்படுத்தவும் தங்கள் உறவுகளை மேம்படுத்தவும் எதையும் செய்வார்கள். இதற்கு அவர்கள் தங்கள் வலுவான உள்ளுணர்வைப் பயன்படுத்துவார்களாம்.. மற்றவர்களின் அன்பையும் விசுவாசத்தையும் அளவிட மன விளையாட்டுகளை விளையாடுவார்களாம்.. மிகவும் புத்திசாலித்தனமாக மற்றவர்களை தங்களின் ஆதிக்கத்தில் சிக்க வைப்பார்களாம்..
எண் கணிதம்: 3ஆம் தேதி பிறந்தவர்கள்
எண் கணிதத்தின் படி, எண் 3 நட்பு, படைப்பாற்றல், தொடர்பு ஆகியவற்றின் குணங்களைக் குறிக்கிறது. எந்த மாதத்திலும் மூன்றாம் தேதி பிறந்தவர்கள் நல்ல நம்பிக்கை உடையவர்கள். மற்றவர்களிடம் மனம் திறந்து பேசுவார். ஆனால் அவர்கள் தங்கள் நலன்களுக்கு ஏற்ப பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். இத்தகைய முயற்சிகள் மிகவும் புத்திசாலித்தனமாக செய்வார்களாம்.. இதனால் மற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள அதிகம்..ஆனால் அது பற்றி அவர்களுக்கு தெரியாது..
எண் கணிதம்: 9ஆம் தேதி பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும் 9 ஆம் தேதி பிறந்தவர்கள் இலட்சியவாதிகளாக இருபார்கள்... இரக்கமும் கருணையும் கொண்டவர். எண் கணிதத்தில் எண் 9 இரக்கம், பரோபகாரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இருப்பினும், அவர்கள் எப்போதாவது மற்றவர்களின் நோக்கங்களையும் யதார்த்தத்தையும் சரிபார்க்க மைண்ட் கேம்களை விளையாடுகிறார்கள்.
எண் கணிதம் : 7ஆம் தேதி பிறந்தவர்கள்
எண் கணிதத்தின்படி எண் 7 சிந்தனை, ஆன்மீகம், விமர்சனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த தேதியில் பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள். ஆனால் அவர்கள் தங்களை உணர்ச்சி ரீதியாக பாதுகாப்பாக வைத்திருக்க மற்றவர்களை கையாளுகிறார்கள். அவர்கள் தங்கள் உறவில் முழுமையான கட்டுப்பாட்டை விரும்புகிறார்கள். பிடிக்காதவர்களை மிக சாதுர்யமாக ஒதுக்கி வைத்துவிடுவார்களாம்.. பிடித்தவர்களையும் தந்திரமாக பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுவார்களாம்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications