Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த 3 தேதிகளில் பிறந்தவங்க அவங்க புத்திசாலித்தனத்தால் ராஜா மாதிரி வாழ்வார்களாம்... உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: ஜோதிட சாஸ்திரத்தில், ஒன்பது கிரகங்கள் மற்றும் நட்சத்திரண்களின் அடிப்படையில் ஒரு நபரின் எதிர்காலம் கண்டறியப்படுவது போல, எண் கணிதத்தில் ஒருவரின் பிறந்த தேதியின் உதவியுடன், ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். எண் கணிதத்தின் படி, பிறந்த தேதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பிறந்த தேதியின் அடிப்படையில், ஒருவரின் விதி எண் நிர்ணயிக்கப்படுகிறது. எண் கணிதத்தின் படி, எந்த மாதத்தின் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்ககளின் விதி எண் 2. எண் 2 உடையவர்களின் இயல்பு மிகவும் அமைதியானது. இந்த எண்ணைக் கொண்டவர்கள் தோற்றத்திலும், மனதளவிலும் அழகாக இருக்கிறார்கள், மேலும் மற்றவர்களை விட புத்திக்கூர்மை மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்களின் ஆளுமை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

புத்திசாலிகள்
நியூமராலஜி படி, இந்த எண்ணல் பிறந்தவர்கள் சிறப்பு புத்திசாலித்தனம் கொண்டவர்கள். இவர்கள் அறிவுசார்ந்த வேலைகளில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டவர்கள் என்றும், இதன் காரணமாக, இந்த எண்ணில் பிறந்தவர்கள் சமூகத்தில் மற்றவர்களை விட அதிக மரியாதை பெறுகிறார்கள். இவர்களின் சிறந்த குணம் என்னவென்றால், பாதகமான சூழ்நிலைகளில் கூட அவர்கள் கலங்குவதில்லை, அதிலிருந்து எப்படி வெளிவரலாம் என்று தங்கள் புத்திக்கூர்மையால் திட்டம் நீட்டுவார்கள்.
நிதிநிலை
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை குவிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். வியாபாரிகள் மட்டுமின்றி வேலையில் இருப்பவர்களும் பெரிய சாதனைகளை செய்வார்கள். இசை, பாடல், கலை போன்ற துறைகளிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களின் சிறந்த இமேஜ் மற்றும் மொழித்திறன் காரணமாக, அவர்கள் சிறந்த தலைவராக மாறுவதற்கான பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளார். மறுபுறம், படைப்பாற்றலுடன் தொடர்புடைய துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் மிகவும் பிரபலமானவர்களாக மாறுவார்கள்.
தன்னம்பிக்கை குறைவானவர்களாக இருக்கலாம்
எதிர்மறை குணங்களைப் பொறுத்தவரை மற்றவர்களை விட இவர்களிடம் சிறிது தன்னம்பிக்கை குறைபாடு உள்ளது. அவர்களால் எந்த முடிவுகளையும் விரைவாக எடுக்க முடியாது, எதையும் விரைவாகச் சொல்ல முடியாது, அதே நேரத்தில், அவர்களின் இயல்பு சூழலைப் பொறுத்து மாறக்கூடியது. சில சமயங்களில், அவர்களின் கவனமின்மை அவர்களுக்கு தோல்வியை பரிசாகக் கொடுக்கலாம்.
அதிர்ஷ்ட நாள்
எண் 2 உடையவர்களுக்கு 2, 11 மற்றும் 20 ஆகிய தேதிகள் மிகவும் மங்களகரமானதாக எண்களாக உள்ளன. எதிர்காலத்திற்காக நீங்கள் ஏதேனும் பெரிய முயற்சியை தொடங்க விரும்பினால், இந்த தேதிகள் அவர்களுக்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகின்றன. அதேசமயம் திங்கள், வெள்ளி மற்றும் ஞாயிறு பொதுவாக இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்களாகக் கருதப்படுகின்றன. இந்த நாட்கள் வெற்றியைப் பெறுவதற்கு மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன.
சிறப்பு குணங்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மென்மையான பேச்சாற்றல், கற்பனைத்திறன் மற்றும் அமைதியான இயல்புடையவர்கள். அவர்கள் நல்ல அறிவுத்திறன் கொண்டவர்கள், இந்த குணத்தால், அவர்கள் மற்றவர்களை விட அதிக பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.
பாதகமான சூழ்நிலைகளில் கூட மனம் தளராமல் அவர்களால் எளிதாக வெற்றி பெற முடிகிறது. அவர்கள் தனியாக இருக்க விரும்புவதில்லை, எப்போதும் மற்றவர்களின் துணையுடன் இருக்க விரும்புகிறார்கள். மொத்தத்தில் அவர்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான ஆளுமைக் கொண்டவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
