Latest Updates
-
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
நியூமராலஜி படி 2025-ல் இந்த 3 தேதிகளில் பிறந்தவங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம்... உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: எண்கள் கணிதத்தில் மட்டுமல்ல நமது வாழ்கையிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் எண்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொடுக்கும். அதேசமயம் சில நேரங்களில் துரதிர்ஷ்டத்தையும், சவால்களையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தனித்துவமான எண்ணை பிரதிபலிக்கிறது, மேலும் அந்த ஆண்டின் எண்ணுக்கும் உங்கள் பிறந்த தேதிக்கும் இடையிலான தொடர்பு மாறுபட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
2025 ஆம் ஆண்டின் எண் 9. எண்கணித கணிப்புகளின் படி 2025 உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா அல்லது தடைகளைத் தருகிறதா என்பது பெரும்பாலும் எண் 9 உங்கள் மூல எண்ணுடன் எவ்வாறு இணைகிறது என்பதைப் பொறுத்தது. இந்த கணிப்புகளின் படி 2025-ல் சில எண்களில் பிறந்தவர்கள் சிறப்பான அதிர்ஷ்டத்தையும், வெற்றிக்கான வாய்ப்புகளையும் பெறப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த எண்களில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எண் 2
எண் கணிதத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு 2-யை விதி எண்ணாக கொண்டவர்களுக்கு வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் ஆண்டாக இது இருக்கும். இந்த ஆண்டு புதிய முயற்சிகளைத் தொடங்கவும், நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறவும் உங்களைத் தூண்டும். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று அதைவைத்து முன்னேறுவதற்கான ஆண்டு இது. மேலும் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். உங்களின் அதிகப்படியான சிந்தனை உங்களின் கவலைகளை அதிகரிக்கலாம், அதை குறைத்துக் கொள்வது நல்லது.
நிதி பிரச்சனைகளும் இந்த ஆண்டு பெருமளவில் குறையும். இருப்பினும், உங்களின் அசட்டு தைரியத்தை வெளிப்படுத்துவதற்கான காலம் இதுவல்ல. எனவே தெரிந்த ஒரு வேலையை சரியாக செய்து முன்னேறுவதற்கான ஆண்டு இது. உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு பல வழிகளில் உதவுவார்கள்.
எண் 4
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு 2025 அவர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் வருடமாக இருக்கும். அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் இந்த வருடம் நடக்கப் போகிறது. குருபகவான் மற்றும் ராகு அவர்களின் அதிர்ஷ்டக்கதவைத் திறக்கப்போகிறார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியையும் ஆடம்பரத்தையும் அனுபவிக்கும் ஆண்டு இது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாகவும், மிகவும் ஆடம்பரமாகவும் வாழ்வார்கள்.
மேலும் இவர்கள் தங்கள் வாழ்க்கையின் வியாபாரத்தில் வெற்றியையும் வளர்ச்சியையும் அனுபவிப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய நிதி சிக்கலை இந்த ஆண்டு தீர்க்க முடியும். இருப்பினும், ராகுவின் தாக்கத்தால் இந்த ஆண்டு அவர்களுக்கு உடல்நிலை சற்று கவலை அளிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
எண் 5
எண் கணிதம் இந்த எண்ணில் பிறந்தவர்கள் 2025-ல் அவர்களின் தொழில் வாழ்க்கையில் தீவிர வளர்ச்சியைக் காண்பார்கள் என்று கணித்துள்ளது. அவர்கள் மாற்றங்களை முழு மனதோடு ஏற்றுக்கொள்வார்கள், மேலும் அவர்களின் கடின உழைப்பின் விளைவாக வெற்றி வருவதையும் காண்பார்கள். இந்த ஆண்டு குறிப்பாக எண் 5 ல் பிறந்த பெண்களுக்கு நன்மை பயக்கும். ஆண்களைப் பொறுத்தவரை தங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் வெற்றியைப் பெறுவதற்கு அவர்களின் நம்பிக்கைக்குரிய பெண்களை உடன் சேர்த்துக் கொள்வது நல்லது.
அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு வாரிசின் வருகையை எதிர்பார்க்கலாம். நிதி ஆதாயங்களும், ஆதரவும் அவர்களை தேடிவரும். அதுமட்டுமின்றி அவர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இது சாதனைகள் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
