Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
இந்த 5 தேதிகளில் பிறந்தவர்கள் பணத்தை சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்... உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: எப்படி ஒருவரது ராசி அந்நபரின் குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள், திறன்கள் போன்றவற்றை பற்றி வெளிப்படுத்துமோ, அதேப் போல் ஒருவரது பிறந்த தேதியும் அந்நபரைப் பற்றி பல விஷயங்களை தெரியப்படுத்தும்.
இப்படி எண்களை அடிப்படையாக கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். ஒவ்வொருவரின் பிறந்த தேதியும் அந்நபரது குணங்களை மட்டுமின்றி, அந்நபர் பண விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்பதையும் தெரியப்படுத்தும்.

தற்போது பணம் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருப்பதால், ஒவ்வொருவரும் அந்த பணத்தை சம்பாதிக்க அல்லும் பகலும் அயராது உழைததுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பணம் சம்பாதிக்கும் அனைவருமே அந்த பணத்தை கையாள்வதிலும், பணத்தை சம்பாதிப்பதிலும் வல்லவர்களாக, கில்லாடிகளாக இருப்பதில்லை.
இருப்பினும் குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பணத்தை கையாள்வதில் சிறந்தவர்களாக இருக்கின்றனர். இப்போது எண் கணிதத்தின் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணத்தை சம்பாதிப்பதில் கில்லாடிகள் என்பதை அறிவோம்.
பிறந்த தேதி 8
ஒரு மாதத்தின் 8 ஆம் தேதியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே செழுமையை ஈர்ப்பார்கள். எண் 8 ஆனது வெற்றி மற்றும் நிதி வளர்ச்சியுடன் தொடர்புடையது. எனவே இந்த தேதியில் பிறந்தவர்கள் பணத்தைப் பற்றிய வலுவான புரிதலைக் கொண்டிருப்பார்கள். நீண்ட கால நிதி வளர்ச்சிக்கு பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமான முதலீடுகள் மற்றும் வணிக முயற்சிகள் மூலம் செல்வத்தை உருவாக்குவதில் திறமைசாலிககள்.
பிறந்த தேதி 17
ஒரு மாதத்தின் 17 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பணத்தை கையாள்வதிலும், அதை திட்டமிட்டு சம்பாதிப்பதிலும் வல்லவர்கள். முக்கியமாக இந்நபர்கள் வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பதால், நீண்ட கால திட்டங்களை வகுத்து, பண இலக்குகளை எளிதில் அடைவார்கள்.
பிறந்த தேதி 4
ஒரு மாதத்தின் 4 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ஒழுக்கமானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் நிதி ரீதியாக விவேகானவர்கள். அதுவும் இவர்கள் எதையும் முறையாக திட்டமிட்டு செய்வார்கள். முக்கியமாக இவர்கள் நிதிகளை புத்திசாலித்தனமாக திட்டமிட்டு நிர்வகிக்கும் இயல்பான திறனைக் கொண்டுள்ளனர், சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பார்கள்.
பிறந்த தேதி 22
ஒரு மாதத்தின் 22 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பெரிய அளவில் நிதி வெற்றியை அடையும் திறனைக் கொண்டுள்ளனர்.நிதி ரீதியாக திறமையானவர்கள். தங்கள் நிதி இலக்குகளை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளனர். இவர்களின் லட்சியம் நிறைய பணத்தை சம்பாதிப்பதாக இருப்பதால், கணிசமான செல்வத்தை உருவாக்குவார்கள்.
பிறந்த தேதி 13
ஒரு மாதத்தின் 13 ஆம் தேதியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமான நிதி பகுப்பாய்வு திறனைக் கொண்டுள்ளனர். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் தொடர்பான விஷயங்களில் நன்கு பகுப்பாய்வு செய்து சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். இப்படியான பகுப்பாய்வு திறன் காரணமாக, இவர்களால் தங்கள் வாழ்வில் நிறைய பணத்தை சம்பாதிக்க முடிகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications