Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
நியூமராலஜி படி இந்த தேதிகளில் பிறந்தவங்க தன் துணையை ஏமாற்றமாட்டாங்களாம்.. ரொம்ப நேர்மையானவங்களாம்..
Numerology: ஜோதிடத்தின் ஒரு கிளையான எண் கணிதமானது எண்களை அடிப்படையாக கொண்டது. இந்த எண் கணிதத்தில் 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒன்பது எண்களும் அதிபதிகளை கொண்டுள்ளன. இந்த எண் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது. இந்த எண்ணைக் கொண்டு அந்நபரின் குணாதியங்கள், வாழ்க்கை முறை மற்றும் உறவுகளைப் பற்றிய புரிதலை தெரிந்து கொள்ள முடியும்.
முக்கியமாக காதல் விஷயத்தில் அவர்கள் எப்படிப்பட்டபவர்கள் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். சில எண்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் உறவுகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அதோடு தங்கள் துணைக்கு மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள் மற்றும் பொறுப்பான வாழ்க்கைத் துணையாகவும் திகழ்வார்கள்.

மேலும் எப்போதும் தனது துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்கள் அப்படி தங்களின் காதல் உறவில் உண்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள் என்பதைக் காண்போம். நீங்களும் இந்த லிஸ்ட்டில் இருக்கீங்களா?
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த 2 ஆம் எண்ணின் அதிபதி சந்திரன். இது உணர்ச்சிகள் மற்றும் மென்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள், சகிப்புத்தன்மை அதிகம் கொண்டவர்கள் மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். இவர்கள் தங்கள் துணையை எப்போதும் புரிந்து நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். மேலும் தனது துணைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் வழங்குவார்கள். உறவுகளில் மிகவும் விசுவாசமானவர்கள் மற்றும் தங்களின் காதலை முழுமையாக வெளிக்காட்டி, துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த எண்ணின் அதிபதி ஞானத்தையும் ஒழுக்கத்தையும் குறிக்கும் வியாழன்/குரு ஆவார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுயமரியாதையை மதிக்கிறார்கள் மற்றும் உறவுகளில் நேர்மையானவர்கள். தங்கள் துணைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். மிகவும் பொறுப்பானவர்கள். சமநிலையான மற்றும் ஒழுக்கமான நடத்தை அவர்களை ஒரு நிலையான மற்றும் நம்பகமான துணையாக ஆக்குகிறது.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணின் அதிபதி அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு, ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் ஆவார். இதனால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கவர்ச்சிகரமானவர்கள், அன்பானவர்கள் மற்றும் காதல் உணர்வு அதிகம் கொண்டவர்கள். இவர்கள் தனது துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, மிகவும் விசுவாசமானவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பொதுவாக மற்றவர்களை கவரும் ஆளுமை மற்றும் நடத்தைக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக இவர்கள் ஒரு சிறந்த மற்றும் நேர்மையான வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications