Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
Numerology: இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் பொறாமைப்படுற மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்வார்களாம்...!
Numerology: கண் திருஷ்டி என்ற கருத்து மிகவும் பழமையானது, பொதுவாக கண் திருஷ்டி பொறாமை அல்லது தவறான விருப்பத்தை ஈர்க்கும் நபர்களுக்கு கெட்ட நேரம் அல்லது துரதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது. கண் திருஷ்டியால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்றாலும், சில தேதிகளில் பிறந்தவர்களை இது மிகவும் எளிதில் பாதிக்கின்றன என்று சிலர் நம்புகிறார்கள். அவர்கள் சில கூடுதல் பாதுகாப்பு பொருட்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நியூமராலஜி படி சில தேதிகளில் பிறந்தவர்கள் எளிதில் கண் திருஷ்டியால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிறந்த தேதி 13
எண் 13 துரதிர்ஷ்டம் மற்றும் மூடநம்பிக்கைகளுடன் நீண்ட காலமாக தொடர்புடையது. இந்த தேதியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பொறாமை மற்றும் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் காந்தங்கள் என்று நம்பப்படுகிறார்கள், அவர்கள்எளிதில் கண் திருஷ்டியின் பிரதான இலக்குகளாக மாறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள் இயல்பானதாக தோண்றினாலும், அவர்கள் விவரிக்க முடியாத பின்னடைவுகள் அல்லது திடீர் துரதிர்ஷ்டங்களை எதிர்கொள்வதைக் காணலாம்.
பிறந்த தேதி 22
எண் 22 என்பது எண் கணிதத்தில் முதன்மை எண்ணாகக் கருதப்படுகிறது, இது பெரும் சக்தியையும் ஆற்றலையும் குறிக்கிறது. இருப்பினும், பெரும் சக்தியுடன் பெரும் பொறுப்பும் வருகிறது என்பதை மறந்து விடக்கூடாது, மேலும் இந்த நபர்கள் பெரும்பாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்கள், இந்த கவனத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டு விஷயங்களுமே இருக்கும். பெரிய காரியங்களைச் சாதிக்கும் அவர்களின் திறன் பொறாமையைத் தூண்டி, அவர்களை கண் திருஷ்டிக்கு ஆளாக்கும்.
பிறந்த தேதி 29
29 ஆம் தேதி பிறந்தவர்கள் ஒரு சிறப்பு ஆற்றலைக் கொண்டுள்ளனர், இவர்கள் பெரும்பாலும் சக்திவாய்ந்த உள்ளுணர்வு மற்றும் உணர்திறன் கொண்டவர்கள். இந்த உணர்திறன், ஒரு பரிசு என்றாலும், மற்றவர்களிடமிருந்து எதிர்மறை ஆற்றலை உறிஞ்சுவதற்கு அவர்களை அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் ஈர்க்கும் பொறாமை, குறிப்பாக அவர்களின் இயல்பான திறமைகள் காரணமாக, அவர்கள் எளிதில் கண் திருஷ்டிக்கு ஆளாகக்கூடும், அவர்கள் கவனமாக இல்லாவிட்டால் உணர்ச்சி மற்றும் உடல்ரீதியான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
பிறந்த தேதி 9
9 ஆம் தேதி பிறந்தவர்கள் பெரும்பாலும் உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலுடன் முதிர்ச்சியான ஆத்மாக்களாகக் காணப்படுகிறார்கள். அவர்களின் ஞானம் மற்றும் தனித்துவமான முன்னோக்கு சில சமயங்களில் மற்றவர்களை பொறாமைப்பட வைக்கலாம், குறிப்பாக அவர்கள் வாழ்க்கையின் சவால்களை எளிதாக வழிநடத்துவது போல் தோன்றுவதால் அதைப்பார்த்து அனைவரும் பொறாமை கொள்ளலாம். இது அவர்களை எளிதில் கண் திருஷ்டியின் இலக்காக மாற்றும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

