Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த தலைவராக இருக்க பிறந்தவர்களாம்... நீங்க பிறந்த தேதி என்ன?
Numerology: ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு ஆளுமை இருப்பது போல ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. சிலர் எந்த இடத்திற்கு சென்றாலும் உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மற்றவர்களால் எடுக்க முடியாத முடிவுகளை மிகவும் தைரியமாக எடுப்பார்கள், அவர்களைச் சுற்றியுள்ள அனைவரையும் வழிநடத்துவார்கள், தங்களுக்கென ஒரு குறிக்கோளை வைத்து அதன் அடிப்படையில் செயல்படுவார்கள்.
எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த சிறப்பு குணங்கள் இருக்கும். அவர்கள் தங்களின் திறமையாலும், வசீகரத்தாலும் சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். அவர்களின் இந்த அசாதாரண ஆற்றலும், உற்சாகமும் அவர்களின் பிறந்த தேதியிலிருந்து வருகிறது. ஒவ்வொரு எண்ணுக்கும் அதன் சொந்த ஆற்றலும், தனித்துவமும் உள்ளது, மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இந்த எண்கள் ஆதிக்கம் செலுத்துகிறது.

தலைமைத்துவ எண்கள்
எண் கணிதத்தில், தலைமைத்துவம் என்பது உங்களின் பிறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படும் வாழ்க்கை பாதை எண்ணுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரு இயற்கையான தலைவர் அதிகாரத்தைத் தேடி செல்வதில்லை, மாறாக அது அவர்களை தேடிவருகிறது. அவர்கள் தங்கள் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் முடிவெடுப்பவர்கள், தங்கள் திறமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள், மற்றவர்களை வழிநடத்துவதில் சிறந்தவர்கள். சில எண்களில் பிறந்தவர்களிடம் இந்த குணங்கள் மற்றவர்களிடம் இருப்பதை விட அதிகமாக இருக்கும். எந்தெந்த எண்களில் பிறந்தவர்கள் தலைவராகப் பிறந்தவர்கள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
எண் 1
அனைத்து மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கைப்பாதை எண் 1 ஆக உள்ளது. அவர்கள் புதுமையான விஷயங்களை உருவாக்க விரும்புகிறார்கள் மற்றும் தெரியாத விஷயங்களில் துணிச்சலுடன் இறங்குகிறார்கள். அவர்கள் தாங்கள் அடைய விரும்பும் சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் வழங்க விரும்புகிறார்கள். வலுவான மன உறுதி, தன்னம்பிக்கை, தொலைநோக்குப் பார்வை மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவர்களிடம் இருக்கும் சிறப்பு பண்புகளாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் புதிய யோசனைகளைத் தொடங்குவதை விரும்புகிறார்கள் மற்றும் தங்கள் சொந்த பாதையை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை அவர்களை ஒரு குழுவின் தலைவர்களாக இயற்கையாகவே மாற்றுகிறது.
எண் 3
அனைத்து மாதத்திலும் 3, 12, 2 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கைப்பாதை எண் 3 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் படைப்பு ஆற்றலால் மற்றவர்களை ஊக்குவிப்பது, கற்பிப்பது மற்றும் மேம்படுத்துவதன் மூலம் வழிநடத்துகிறார்கள். அவர்களிடம் இருக்கும் மிகச்சிறந்த குணம் அவர்களின் பேச்சாற்றல்தான், அவர்கள் ஊக்கமளிக்கும் ஆளுமைகள், படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் மகிழ்ச்சியானவர்கள், மற்றும் வேடிக்கை மற்றும் பொறுப்பை சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். அவர்களின் நேர்மறையான ஆற்றல் மற்றும் வெளிப்படைத்தன்மையால் அவர்கள் சிறந்த வழிகாட்டிகளாகவும், பேச்சாளர்களாகவும், அவர்களின் வார்த்தைகள் மூலம் சமூகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
எண் 8
அனைத்து மாதத்திலும் 8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 8 ஆம் எண்ணின் உறுதியான அதிர்வுகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் பலம் என்பது அவர்களின் திட்டமிடல் மற்றும் நீண்டகால உத்தியில் உள்ளது. அவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள், எதார்த்த அணுகுமுறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வலுவான நிர்வாகத் திறன்கள் ஆகியவை அவர்களின் முக்கிய பண்புகளாகும். அவர்கள் உறுதியானவர் மற்றும் அழுத்தமான சூழ்நிலைகளை திறம்பட கையாளும் திறன் கொண்டவர்கள். அவர்களின் தலைமைத்துவம் என்பது நம்பகமானது மற்றும் இலக்குகள் சார்ந்தது.
எண் 9
அனைத்து மாதத்திலும் 9, 18 அல்லது 27 போன்ற பிறந்த தேதிகளைக் கொண்டவர்கள் எண் 9 இன் ஆற்றலைப் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் இதயம் சொல்வதைக் கேட்டு மற்றவர்களை வழிநடத்துகிறார்கள், மேலும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மேம்படுத்த உண்மையான ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் முக்கிய பண்புகள் என்னவெனில், அவர்கள் துணிச்சலானவர்கள், தன்னலமற்றவர்கள், இயற்கையான பாதுகாவலர்கள் மற்றும் வலுவான நீதி உணர்வு கொண்டவர்கள். அவர்களின் தலைமை பெரும்பாலும் சமூகம் சார்ந்த, சேவை சார்ந்த அல்லது சமூகரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் பிரகாசிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

