Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்த ஆண்கள் அவங்க மனைவியை ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்...!
Numerology: திருமண உறவில் கணவன்-மனைவி இருவருமே விட்டுக்கொடுத்து செல்பவராக இருந்தால் மட்டுமே அந்த உறவு மகிழ்ச்சியானதாக இருக்கும். இருவரில் ஒருவர் அதிகாரம் செலுத்த ஆசைப்பட்டாலும் அந்த உறவு விரைவில் சிதைந்துவிடும். உங்கள் கணவர் எவ்வளவு அதிகாரம் செலுத்துபவராக இருப்பார் என்பதை அவர்களின் பிறந்த தேதி நிர்ணயிக்கும் என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கும், அதிகாரமிக்கவர்களாகவும், வீட்டு விஷயங்களில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஆளுமைக் கொண்டவர்களாக இருந்தாலும், சில கணவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பதற்கான காரணம் அவர்களின் பிறந்த தேதியாக இருக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. அவை எந்தெந்த தேதிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கிரகங்களின் தாக்கங்கள்
சனி, செவ்வாய் மற்றும் சூரியன் போன்ற வலுவான மற்றும் அதிகாரபூர்வமான கிரகங்களால் ஆளப்படும் தேதிகளில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் இயற்கையாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்தும் தங்களின் சொல்படி நடக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள், மேலும் அதுபோன்ற சூழலில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் குடும்ப விஷயங்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை ஒரு முதலாளி போலவே நடத்துகிறார்கள்.
எண் 8 (அனைத்து மதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
உங்கள் கணவர் ஏதேனும் ஒரு மாதத்தில் 8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்திருந்தால் அவர் சூரியனின் லட்சிய மற்றும் அதிகாரம் செலுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம். சூரியனின் செல்வாக்கு அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பவராக இருக்க ஆசை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.
இந்த தேதியில் பிறந்த ஆண்கள் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களை வழிநடத்துவதற்கும், எல்லாம் சீராக நடப்பதை உறுதி செய்வதற்கும் பொறுப்பாக உணர்கிறார்கள். இருப்பினும், அவர்களின் வலுவான பொறுப்புணர்வு சில சமயங்களில் கொஞ்சம் ஆதிக்கமாக மாறலாம்.
எண் 9 (அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
9, 18 அல்லது 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் செயல், ஆற்றல் மற்றும் உறுதியின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கின் கீழ் பிறந்த கணவர்கள் தங்கள் மனஉறுதி மற்றும் உடனடி செயல்பாடுகளுக்கு பெற்றவர்கள். அவர்கள் அனைத்து விஷயங்களையும் பொறுப்பேற்று நடத்த விரும்புகிறார்கள், மேலும் அவர்களின் திட்டத்தின்படி விஷயங்கள் நடக்காதபோது, அவர்கள் எண்ணத்தை நிறைவேற்ற மற்றவர்களை வற்புறுத்துவார்கள்.
செவ்வாய் கிரகத்தால் இயக்கப்படும் ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும், பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் வலுவான இயல்பு சில நேரங்களில் அவர்களை ஆதிக்கம் செலுத்துபவராக மாற்றலாம்.
எண் 4(அனைத்து மாதத்திலும் 4, 13 மற்றும் 22 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
4, 13, 22 அல்லது 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமான சனியால் ஆளப்படுகின்றனர். இந்த தேதியில் பிறந்த கணவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களின் தூண்களாக கருதப்படுகிறார்கள், குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அவர்கள் ஒழுக்கத்தை பெரிதாக மதிக்கிறார்கள் மற்றும் ஒவ்வொரு விஷயங்களையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதில் உறுதியான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நோக்கங்கள் பெரும்பாலும் அன்பு மற்றும் கவனிப்பாக இருந்தாலும், அவர்களின் கடினமான இயல்பு சில நேரங்களில் அதிகாரம் செல்லுபவர்களாக மாற்றலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












