Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
நீங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களுக்கு யாரு பொருத்தமா இருப்பாங்க-ன்னு சொல்றோம்...
Numerology: ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். ஜோதிடத்தில் ஒருவரது ராசியைக் கொண்டு அந்நபரின் குணங்கள், நல்லது, கெட்டது மற்றும் எதிர்காலம் போன்றவை கணிக்கப்படுகின்றன. அதேப் போல் எண் கணிதத்தில் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரைப் பற்றிய விஷயங்கள் கணித்து கூறப்படுகின்றன.
பொதுவாக எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்களானது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும். உதாரணமாக, உங்கள் பிறந்த தேதி 24 என்றால், உங்களுக்கான எண் 2+4=6 ஆகும்.

இந்த 1 முதல் 9 வரையிலான எண்ணிற்கு உரியவர்களின் குணங்கள், அந்த எண்ணின் அதிபதிகளைப் பொறுத்து வேறுபடும். நீங்கள் உங்களுக்கு பொருத்தமான நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு எண் கணிதம் உதவும். இப்போது எந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்பதைக் காண்போம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணிற்கு உரியவர்கள் பொதுவாக அதிகாரத்துடன் நடந்து கொள்வார்கள் மற்றும் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு பொருத்தமானவர்கள் என்றால் அது 2, 3 மற்றும் 9 ஆகும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணிற்கு உரியவர்கள் அமைதியானவர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்டிருப்பார்கள். முக்கியமாக மிகவும் ரொமான்டிக்கானவர்கள். இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு பொருத்தமானவர்கள் என்றால் அது 1, 3, மற்றும் 2 ஆகும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த எண்ணிற்கு உரியவர்கள் சுதந்திரமானவர்கள், யாரையும் சார்ந்திருக்கமாட்டார்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு பொருத்தமானவர்கள் என்றால், அது 1, 2 மற்றும் 9 ஆகிய எண்ணிற்கு உரியவர்கள் தான்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணிற்கு உரியவர்கள் ரகசியமானவர்கள் மற்றும் குறுகிய மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்கள் 5, 7 மற்றும் 8 ஆகிய எண்ணிற்கு உரியவர்கள் தான். அதுவும் திருமணம் செய்வதாக இருந்தால், 8 என்ற எண்ணிற்கு உரியவர்கள் தான் நல்ல பொருத்தமாக இருப்பார்கள்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இவர்கள் ஒருபோதும் ஓய்வெடுக்கமாட்டார்கள். எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 1, 4, மற்றும் 6 ஆகிய எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணிற்கு உரியவர்கள் எதையும் கண்ணியமாக கையாளக்கூடியவர்கள். இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு பொருத்தமானவர்கள் என்றால் அது 4, 5 மற்றும் 8 ஆகிய எண்ணிற்கு உரியவர்கள் தான்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த எண்ணிற்கு உரியவர்கள் வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 1, 2 மற்றும் 9 ஆகிய எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணிற்கு உரியவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் வாழ்க்கையை வாழ்வார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு பொருத்தமானவர்கள் என்றால், அது 1 மற்றும் 2 ஆகிய எண்ணிற்கு உரியவர்கள் தான்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த எண்ணிற்கு உரியவர்கள் கண்மூடித்தனமாக நம்புவார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு பொருத்தமானவர்கள் என்றால் 1, 4 மற்றும் 5 ஆகிய எண்ணிற்கு உரியவர்கள் தான்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications