உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? பிப்ரவரி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்...!

Numerology: ஒவ்வொரு மாதமும் பிறக்கும் போது என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ராசிபலன்களை பாப்போம், ஆனால் ஒருவரின் பிறந்த ராசி மட்டுமின்றி அவர்களின் பிறந்த தேதியை வைத்தும் அவர்களின் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளலாம். பிப்ரவரி 2025 இல் எண் கணிதத்தின்படி நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி இருப்பீர்கள் என்பதைத் தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.

நியூமராலஜி படி அடுத்த 28 நாட்கள் அதிர்ஷ்டத்தைத் தருமா அல்லது துரதிர்ஷ்டத்தைத் தருமா என்று தெரிந்து கொள்ள உங்களின் பிறந்த தேதியை பயன்படுத்தலாம். உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் வரப்போகிற மாதம் எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Numerology Horoscope February 2025 Numerology Predictions for February 2025 in Tamil

1, 10, 19 மற்றும் 28 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், பிப்ரவரி மாதத்தில் எந்த முயற்சியிலும் நீங்கள் தைரியமாக ஈடுபடலாம். நீங்கள் எந்தவொரு விஷயத்தையும் சுதந்திரமாக செய்யலாம். சுதந்திரம் இருந்தாலும் இந்த மாதம் நிதிரீதியாக பெரும் பின்னடைவை சந்திப்பீர்கள், பொருளாதார பிரச்சினையால் சில வேலைகள் தடைபடலாம். கூட்டுறவு மனப்பான்மையுடன் முன்னேறுவது சாத்தியமாகும். இருப்பினும் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும்.

2,11,20 மற்றும் 29 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், இந்த மாதம் நீங்கள் பல விஷயங்களைப் பற்றி உணர்ச்சிரீதியாக சிந்திப்பீர்கள். இது பெரும்பாலும் சுயபரிசோதனை செய்து தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான ஒரு மாதமாக இருக்கும். அதுதான் அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. வேலையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதம் வார்த்தைகளில் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், இந்த மாதத்தில் உங்கள் வேலையில் பல்வேறு மாற்றங்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெரும்பாலும் அடையலாம். இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை காத்திருக்கிறது. உங்கள் குடும்பத்தின் சூழ்நிலை நேர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.

Numerology Horoscope February 2025 Numerology Predictions for February 2025 in Tamil

4, 13, 22 மற்றும் 31 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், இந்த மாதத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். உங்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் இருக்கலாம். இந்த மாதம் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மாதமாக இருக்கும். உங்கள் வேலை தொடர்பான விஷயங்களை வெற்றிகரமாக முடிக்க முடியும். குடும்பத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும்.

5, 13 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால் இந்த மாதம் நீங்கள் வேகமாகவும், மகிழ்ச்சியாகவும் முன்னேறிச் செல்வார்கள். ஆனால் அலுவலகத்தில் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. பெரும்பாலும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான பயணம் செல்வதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். நிதிரீதியாகவும் இந்த மாதம் நீங்கள் பலமாக இருப்பீர்கள்.

6, 14 மற்றும் 24 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், இந்த மாதம் உங்கள் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உங்களுக்குள் எழலாம். பெரும்பாலும் உங்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

7, 16 மற்றும் 25 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், இந்த மாதம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய மாதமாகும். இந்த மாதம் நீங்கள் பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் ஆனால் நீங்கள் அதிக கவனம் செலுத்தினால், எல்லாவற்றையும் சமாளித்து ஒருவகையாக முன்னேறலாம். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும், அதனால் நீங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

8, 17 மற்றும் 26 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், இந்த மாதம் நீங்கள் வெற்றியை அடையக்கூடிய மாதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரும்பாலும், உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் பல ஆசைகள் இந்த மாதம் நிறைவேறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

9, 18 மற்றும் 27 தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், பிப்ரவரி மாதம் பல நேர்மறையான மாற்றங்களை சந்திக்கும் மாதமாக இருக்கும். இது உங்கள் வாழ்க்கையை மிகவும் ஆடம்பரமாக மாற்றும். அனைத்து வகையான மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டு முன்னேறும்போது பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, January 29, 2025, 21:21 [IST]
Desktop Bottom Promotion