Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க உடனே நிறுத்த வேண்டிய 4 விஷயங்களை சொல்றோம்..
Numerology: ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நியூமராலஜி படி, ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டே அந்நபரின் குணாதியங்கள் எப்படி இருக்கும், அவரது பலம், பலவீனம் என்ன, எதில் வல்லவராக இருப்பார், எந்த வேலை சிறந்ததாக இருக்கும் என்பன போன்ற பலவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
அதே வேளையில் பிறந்த தேதிப்படி எதை தவிர்க்க வேண்டும் மற்றும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதை பின்பற்றினால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அந்த வகையில் ஜோதிடர் வான்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த தேதிப்படி ஒருவர் உடனே நிறுத்த வேண்டிய 4 விஷயங்கள் குறித்தும், செழிப்பான வாழ்க்கைக்கு செய்ய வேண்டியவைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்,
1. நீங்கள் மற்றவர்களை சார்ந்து எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. ஞாயிற்று கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
3. ஆதிக்கம் செலுத்தும் நபர்களின் கீழ் வேலை செய்வதை நிறுத்த வேண்டும். இது உங்களின் தன்னம்பிக்கையை உடைக்கும்.
4. பணியிடத்தில் உங்கள் மேஜையை ஒழுங்கீனமாக வைத்திருப்பதை நிறுத்த வேண்டும்.
செய்ய வேண்டியவை: காலையில் கிழக்கு திசையை நோக்கி ஒரு தீபத்தை ஏற்றி வையுங்கள் மற்றும் அடிக்கடி சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்,
1. ஆக்ரோஷமான மனிதர்களுடன் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இது உங்களின் உள்ளுணர்வை அழிக்கும்.
2. உணவு உண்பதைத் தவிர்ப்பதை நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சந்திரனின் ஆற்றலை பலவீனமாக்கும்.
3. அடர் சிவப்பு அல்லது மெரூன் நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உணர்ச்சி சமநிலையை சீர்குலைக்கும்.
4. தினமும் உங்கள் ஆற்றலைச் சுத்தப்படுத்தாமல் தூங்குவதை நிறுத்த வேண்டும்.
செய்ய வேண்டியவை: வீட்டில் காய்ந்த பூக்களை அகற்றிவிட்டு, புதிய பூக்களை மாற்றுங்கள் மற்றும் உணர்ச்சி சமநிலைக்கு நிலாக்கல்லை அணியுங்கள்.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்,
1. எதிர்மறையாக பேசுவதை/விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.
2. கிசுகிசு பேசுவதை/அதிக வாக்குறுதி அளிப்பதை நிறுத்த வேண்டும்.
3. வியாழக்கிழமைகளில் கருப்பு அல்லது சாம்பல் நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
4. பயன்படாத நோட்டு புத்தகங்கள் அல்லது பேனாக்களை வைத்திருப்பதை நிறுத்த வேண்டும்.
செய்ய வேண்டியவை: தினமும் காலையில் சந்தன ஊதுபத்தியை ஏற்ற வேண்டும் மற்றும் ஏதாவது ஒரு தங்க நகையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்,
1. புகார் செய்வதை நிறுத்துங்கள் அல்லது தோல்வியை கண்டு அஞ்சுவதை நிறுத்துங்கள்.
2. பணியிடத்தை அசுத்தமாக வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
3. வெள்ளி, தங்கம் என பல வகையான நகைகளை ஒன்றாக அணிவதை தவிர்த்து, ஏதாவது ஒன்றை அணியுங்கள்.
4. ஒழுங்கீனமாக இருப்பதை நிறுத்துங்கள்.
செய்ய வேண்டியவை: உங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள். நீலம் அல்லது சாம்பல் நிற ஆடைகளை அடிக்கடி அணியுங்கள்.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்...
1. ஒரே இடத்தில் தேங்கியிருப்பதை நிறுத்துங்கள். வளர்ச்சிக்கு மாற்றம் மிகவும் அவசியம்.
2. புகைப்பிடிப்பது, அதிகமாக காப்ஃபைன் அருந்துவது அல்லது குழப்பமான வழக்கத்தை கொள்வதை நிறுத்துங்கள்.
3. அடர் ப்ரௌன் நிற ஆடைகளை அடிக்கடி அணிவதைத் தவிர்த்திடுங்கள்.
4. அளவுக்கு அதிகமாக சிந்திப்பதை அல்லது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதை நிறுத்துங்கள்.
செய்ய வேண்டியவை: இடது கையில் பச்சை அவென்டூரின் அணியுங்கள் மற்றும் அடிக்கடி சிறிய பயணங்களைத் திட்டமிட்டு பயணம் செய்யுங்கள்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்...
1. மற்றவர்களை மகிழ்விப்பதை நிறுத்துங்கள்.
2. உடைந்த அல்லது பயன்படாத பொருட்களை வீட்டில் வைத்திருப்பதை நிறுத்துங்கள்.
3. வெள்ளிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள்.
4. நச்சுமிக்க உறவுகளில் இருப்பதை நிறுத்துங்கள்.
செய்ய வேண்டியவை: ஏழை எளியோருக்கு அல்லது தேவைப்படுபவர்களுக்கு சுயநலமின்றி உதவுங்கள். இடது கையில் ரோஸ் குவார்ட்ஸ் கல்லை அணியுங்கள்.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்,
1. அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதை நிறுத்துங்கள்.
2. கூட்டமான இடங்களுக்கு அதிகம் செல்வதை நிறுத்துங்கள்.
3. சிவப்பு நிற ஆடைகளை அணிவதை நிறுத்துங்கள்.
4. வீட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரை வைத்திருப்பதை நிறுத்துங்கள்.
செய்ய வேண்டியவை: தினமும் 10-15 நிமிடம் தியானம் செய்யுங்கள் மற்றும் லாவெண்டரை தினமும் வீட்டில் எரியுங்கள்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்,
1. ஆலோசிக்காமல் பணம் கடன் கொடுப்பதை நிறுத்துங்கள்.
2. பணத்தைப் பற்றி வாதிடுவதை நிறுத்துங்கள்.
3. சனிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள்.
4. பெரியோரை அவமதிப்பதை நிறுத்துங்கள்.
செய்ய வேண்டியவை: தான தர்மங்கள் உங்கள் செழிப்பை இரட்டிப்பாக்கும் மற்றும் பாதுகாப்புக்காக கருப்பு டூர்மலைன் அணியுங்கள்.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால்,
1. மனக்கசப்புகளை வைத்திருப்பதை நிறுத்துங்கள்.
2. அதிகமாக கருப்பு அல்லது சாம்பல் நிற ஆடைகளை அணிவதை நிறுத்துங்கள்.
3. நன்றியற்ற மக்களுக்கு அதிகமாக உதவுவதை நிறுத்துங்கள்.
4. படுக்கைக்கு அடியில் உடைந்த அல்லது பயன்படுத்தாத பொருட்களை வைப்பதை நிறுத்துங்கள்.
செய்ய வேண்டியவை: தினமும் வீட்டில் கற்பூரத்தை ஏற்றுங்கள் மற்றும் கையில் சிவப்பு பவள மோதிரத்தை அணியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications