Latest Updates
-
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!' -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
நீங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? 2026-ல் எந்த மாதம் உங்களுக்கு துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கும்னு சொல்றோம்!
2026 ஆம் ஆண்டு வந்துவிட்டது, பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டு தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும், விருப்பமாகவும் இருக்கும். ஆனால் எதார்த்தம் என்னவெனில் ஆண்டு முழுவதும் யாருக்குமே அதிர்ஷ்டமானதாக இருக்கப்போவதில்லை. ஆண்டின் சில காலகட்டம் சோதனைகளும், போராட்டங்களும் நிறைந்ததாகத்தான் இருக்கும்.
2026 ஆம் ஆண்டுக்கான எண்கணித கணிப்புகளின் படி, இந்த புதிய வருடம் உங்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் எப்படி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் ஆண்டின் எந்த காலகட்டம் உங்களுக்கு துரதிர்ஷ்டமானதாகவும், போராட்டங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று தெரிந்து கொள்வது இந்த வருடத்தை எதிர்கொள்வதற்கு மிகவும் அவசியமானது. இந்த பதிவில் உங்கள் பிறந்த தேதியின் படி 2026-ல் எந்த மாதம் உங்களுக்கு துரதிர்ஷ்டமானதாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 1
எண் 1 தலைமைத்துவத்தையும், தன்னம்பிக்கையும் குறிக்கிறது, இது சூரியனால் ஆளப்படுகிறது. நீங்கள் எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்திருந்தால், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கவனமாக இருங்கள். இந்த மாதங்களில் நீங்கள் வேலையில் தடைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்பார்க்கலாம். இது மிகவும் துரதிர்ஷ்டமான மாதங்களாக இருக்கும்.
எண் 2
எண் 2- பிறந்தவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், இவர்கள் சந்திரனால் ஆளப்படுபவர்கள். அனைத்து மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, 2026 ஆம் ஆண்டில், ஏப்ரல், மே, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் மிகவும் துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இந்த மாதங்களில் உணர்ச்சி சமநிலையின்மை மற்றும் உறவுவுகளில் சிக்கல்களை எதிர்பார்க்கலாம்.
எண் 3
எண் 3 ஞானத்தைக் குறிக்கிறது, இது முன்னேற்றத்தின் கிரகமான குருபகவானால் ஆளப்படுகிறது. அனைத்து மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஏப்ரல், ஜூன் மற்றும் செப்டம்பர் 2026 மாதங்கள் சவாலான மாதங்களாக இருக்கலாம். இந்த மாதங்களில் ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்க்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
எண் 4
எண் 4-ஐச் சேர்ந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்தில் உள்ள தனித்துவமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள். அனைத்து மாதத்திலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, 2026-ஆம் ஆண்டில், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் மே மாதங்கள் சவாலான மாதங்களாக இருக்கும். இந்த மாதங்கள் வேலைகளில் தடைகள், குழப்பம் மற்றும் மன அழுத்தத்தைக் கொண்டு வரக்கூடும்.
எண் 5
எண் 5-யைச் சேர்ந்தவர்கள் கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படுகிறார்கள், அவர்கள் புத்திசாலித்தனமான பேச்சாற்றல் கொண்டவர்கள். அனைத்து மாதத்திலும் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2026 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக இருந்தாலும், ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்கள் அவர்களுக்கு சற்று சவாலானதாக இருக்கலாம். அந்த மாதங்களில் பெரிய பணப் பரிவர்த்தனைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும்.
எண் 6
எண் 6-ல் பிறந்தசிவர்கள் பொதுவாக அழகு மற்றும் ஆடம்பரத்தை விரும்புவார்கள், இவர்கள் அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். அனைத்து மாதத்திலும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் 2026-ஆம் ஆண்டில், ஜனவரி, மார்ச், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக தடைகளையும், சவால்களையும் சந்திப்பார்கள். இந்த மாதங்களில் செலவுகள் அதிகரிக்கக்கூடும் மற்றும் உறவுகளில் பதற்றம் ஏற்படலாம்.
எண் 7
எண் 7 ஆன்மீகம் மற்றும் ஆழ்ந்த சிந்தனையுடன் தொடர்புடையது, இது நிழல் கிரகமான கேதுவால் ஆளப்படுகிறது. அனைத்து மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2026-ல் மார்ச், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்கள் கடினமாக இருக்கலாம். இந்த மாதங்களில் நீங்கள் குழப்பமாகவும் முடிவெடுக்க முடியாமலும் உணரக்கூடும்.
எண் 8
எண் 8 என்பது ஒழுக்கம் மற்றும் செயல்பாடு பற்றிய எண்ணாகும், இது ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவனால் ஆளப்படுகிறது. அனைத்து மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2026 ஆம் ஆண்டில், ஜனவரி, மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதங்களில் அவர்கள் தொழில் வாழ்க்கையில் தடைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் அழுத்தங்களையும் சந்திக்க நேரிடும்.
எண் 9
எண் 9 தைரியத்தையும் ஆற்றலையும் குறிக்கிறது, இது கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. அனைத்து மாதத்திலும் 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சோதனைகள் நிறைந்த மாதங்களாக இருக்கும். இந்த மாதங்களில் கோபமும் அவசரமும் தீங்கு விளைவிக்கும், எனவே அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
