Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
November 2025 Horoscope: நவம்பர் மாதம் இந்த 3 ராசிகளுக்கு நரகத்தை விட மோசமாக இருக்கப்போகுதாம்.. உங்க ராசி என்ன
November 2025 Horoscope: நவம்பர் மாதம் தொடங்கப்போகிறது. இந்த மாதத்தில் பல கிரக பெயர்ச்சிகள் நடைபெறப்போகிறது. இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம், பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் அதேநேரத்தில் சில ராசிக்காரர்கள் தடைகள், சவால்கள் மற்றும் துரதிர்ஷ்டத்தை சந்திக்கப் போகிறார்கள், இந்த மாதம் அவர்களுக்கு மிகவும் மோசமான மாதமாக இருக்கும்.
ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் இது தற்காலிகமான பின்னடைவுகள் மட்டுமே, கிரகங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதால் விரைவில் சூழல் அவர்களுக்கு சாதகமானதாக மாறலாம். இந்த பதிவில் நவம்பர் மாதம் எந்தெந்த ராசிக்காரரர்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திரனால் ஆளப்படுகிறார்கள், நவம்பர் மாதத்தில் கடக ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அவர்களின் காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கையில் தவறான புரிதல்கள் ஏற்படலாம், இதனால் அவர்கள் தங்கள் துணையை பிரியும் முடிவுக்கு வரலாம், இது அவர்களுக்கு பெரிய பிரச்சனையை உருவாக்கக்கூடும்.
அவர்கள் உளவியல்ரீதியாக பிரிவுக்கு தயாராக இல்லாததால் அவர்கள் உணர்ச்சிரீதியாகவும், மனரீதியாகவும் உடைந்து போகலாம், மேலும் இந்த சூழ்நிலையிலிருந்து சமாளித்து வெளியே வர சிறிது நேரம் தேவைப்படலாம். அலுவலகத்தில் சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்காது, இதனால் நீங்கள் மிகவும் பதட்டமாக உணரலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படுகிறார்கள். நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருத்தமான வேலை எதுவும் கிடைக்காது, மேலும் தொழிலதிபர்கள் தங்கள் வேலையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் இது அவர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம்.
இந்த பிரச்சினைகளை சமாளிக்க அவர்களுக்கு போதுமான உதவி கிடைக்காது, இதனால் நவம்பர் மாதம் அவர்களுக்கு மிகவும் சவாலான மாதமாக இருக்கும். சிறிது காலம் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், இந்த சோதனையான காலம் விரைவில் கடந்து விடும், எதற்கும் உடைந்து போகாதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் காதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள், இந்த மாதம் அவர்களுக்கு சாதகமாக இருக்காது, சுக்கிரன் துலாம் ராசியில் இருந்தாலும், இந்த மாதம் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போவதில்லை. நவம்பர் மாதம் அவர்களுக்கு பல்வேறு சவால்களை கொண்டுவருகிறது.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என பல பக்கங்களிலிருந்தும் பிரச்சினைகள் வருவதைக் கண்டு அவர்கள் மனதளவில் விரக்தியடைவார்கள், மேலும் அவர்கள் சில உடல்நலப் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். எனவே அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் இந்த மாதம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த மாதம் உங்களுக்கு உதவிகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும், எனவே எதற்கும் விரக்தி அடையாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
