Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை மோசமாக விமர்சிக்கும் பழக்கம் உள்ளவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். பொதுவாக மற்றவர்களை விமர்சிக்கும் குணம் குணம் அனைவருக்கும் இருக்கும். ஒரு விதத்தில் பார்க்கப்போனால் இது நேர்மறையானதும் கூட. ஆனால் சில ராசிக்காரர்கள் மற்றவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களையும் கவனித்து அளவிற்கு அதிகமாக விமர்சிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மோசமான குணம் அவர்களை அனைவரும் வெறுக்கும் நபர்களாக மாற்றக்கூடும்.
அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை முறை முதல் அவர்களின் அன்றாட செயல்பாடுகள் வரை அனைத்தையும் கூர்ந்து கவனிப்பவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் எப்போதும் எடைபோட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மற்றவர்களை விமர்சிப்பதும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாத விஷயங்களாகும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களை விமர்சிப்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதிலும், ஒழுக்கம் தொடர்பான விஷயங்களிலும் மிகவும் கண்டிப்பானவர். அனைத்து விஷயங்களும் எப்போதும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதனால், ஒருவர் தவறு செய்வதையோ அல்லது ஒழுங்கீனமாக இருப்பதையோ அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த விஷயங்களை பார்க்கும்போது அவர்களுக்குள் எச்சரிக்கை உணர்வு ஏற்படும். அவர்கள் உங்கள் தவறை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் சிறிய தவறுகள் அனைத்தையும் மனதில் குறித்து வைத்துக்கொள்வார்கள். நேரம் வரும் போது உங்களின் தவறை சுட்டிக்காட்ட அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். தவறுகளை சுட்டிக்காட்டுவதும், விமர்சிப்பதும் அவர்களின் இயல்பான குணமாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் மற்றும் சீரியசானவர்கள். அவர்கள் அனைத்தையும் விட வெற்றிக்கும், கடின உழைப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். யாராவது சோம்பேறியாக இருப்பதையோ அல்லது நேரத்தை வீணடிப்பதையோ கண்டால், அவர்கள் உடனடியாக அவர்களை விமர்சிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் தங்களுக்கென்று உயர்ந்த தரநிலைகளை வைத்திருக்கிறார்கள், மற்றவர்களும் அவற்றின்படி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழில் தேர்வுகளைப் பற்றி அவர்கள் பெரும்பாலும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக அமைதியை விரும்புபவர்களாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்ளைலும் சமநிலையை பராமரிக்க வேண்டுமென்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். யாராவது பொருத்தமற்ற ஆடை அணிந்திருந்தாலோ அல்லது தவறாக நடந்துகொண்டாலோ, அவர்கள் அவர்களைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் அழகு மற்றும் நன்னடத்தையை விரும்புபவர்கள். எனவே, ஏதேனும் ஒன்று தங்களுக்குச் சரியாகத் தோன்றவில்லை என்றால், அதைப்பற்றித் தங்கள் நண்பர்களுடன் விவாதிக்கவோ அல்லது கருத்துத் தெரிவிக்கவோ அவர்கள் தயங்கவே மாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் அதிகமாக பேசக்கூடியவர்கள் மற்றும் எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்களின் விமர்சனங்கள் பெரும்பாலும் கிசுகிசுக்களுடன் தொடர்புடையவையாக இருக்கும். மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். ஒருவரின் வாழ்க்கையில் சுவாரஸ்யமான அல்லது வித்தியாசமான ஒரு விஷயத்தைப் பார்த்தால், அவர்கள் உடனடியாக அதைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல, மாறாக அவர்களின் பொழுதுபோக்கிற்காகவே ஆகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












