Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசி ஆண்களிடம் பெண்களை கவரும் வசீகரம் இயற்கையாகவே இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
எல்லோருக்கும் பிடித்த நபராக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். ஒருவரை அனைவருக்கும் பிடித்தவராக மாற்றுவதில் அவர்களின் தோற்றமும், வசீகரமும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒருவரின் வசீகரம் என்று வரும்போது, அவர்களின் பிறந்த ராசி அவர்களுடைய கவர்ச்சியை வடிவமைப்பதில் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அழகு என்பது பார்ப்பவரின் கண்ணில் இருந்தாலும், சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் மறுக்க முடியாத வசீகரம் மற்றும் அழகோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஸ்டைல் மற்றும் தோற்றம் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் அனைவரையும் ஈர்க்கும் வசீகரமானவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி ஆண்கள் அசாத்திய தைரியம் மற்றும் சாகச மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், வலுவான உடல் அமைப்பு மற்றும் தன்னம்பிக்கையான நடத்தை ஆகியவற்றால், மற்றவர்களால் தவிர்க்க முடியாத அழகை வெளிப்படுத்துகிறார்கள், அதை தவிர்ப்பது என்பது மிகவும் கடினமானது, குறிப்பாக பெண்களுக்கு.
மேஷ ராசி ஆண்கள்வசீகரமான தோற்றத்தைக் கொண்டுள்ளனர், எப்போதும் புதிய சவால்களை அச்சமற்ற அணுகுமுறையுடன் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். அவர்களின் உற்சாகமான மற்றும் தன்னிச்சையான இயல்பு அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசி ஆண்கள் தங்கள் உன்னதமான அழகுக்கும், நேர்த்தியான உணர்வுக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்களின் நன்கு பராமரிக்கப்பட்ட தோற்றம் மற்றும் நம்பகமான ஆளுமையுடன், அவர்கள் காலத்தால் அழியாத அழகைக் கொண்டுள்ளனர், இது பெரும்பாலான மக்களை ஈர்க்கிறது.
ரிஷப ராசிக்காரர்கள் அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள், இது அவர்களுக்கு இயற்கையான வசீகர உணர்வை, காதல் மீதான தீவிர ஆர்வத்தையும் அளிக்கிறது. அவர்களின் நடத்தை அவர்களின் அதிநவீன ஸ்டைலை சேர்க்கிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தவிர்க்க முடியாத வசீகரம் மற்றும் ஆதிக்கத்தால் தனித்து நிற்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஸ்டைலான தோற்றத்தையும், சக்திவாய்ந்த உடலமைப்பையும் கொண்டுள்ளனர், இது அவர்களை கவனத்தின் மையமாக மாற்றுகிறது.
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையான தன்னம்பிக்கையையும், அனைவரையும் வரவேற்கும் ஒளியையும் கொண்டுள்ளனர். அவர்களின் விளையாட்டுத்தனமான மற்றும் தாராள மனப்பான்மை, அவர்களை தவிர்க்கமுடியாத அழகானவர்களாகவும், வசீகரிப்பவர்களாகவும் மாற்றுகிறது.
துலாம்
துலாம் ராசி ஆண்கள் நேர்த்தி மற்றும் வசீகரத்தின் மொத்த வடிவமாக இருப்பார்கள். சுக்கிரனால் ஆளப்படும் இவர்கள் இயற்கையான நளினத்தையும், அழகியல் உணர்வையும் கொண்டுள்ளனர். துலாம் ராசிக்காரர்கள் தங்கள் சமநிலையான குணங்கள் மற்றும் ஈடு செய்ய முடியாத நேரத்திக்கு பெயர் பெற்றவர்கள்.
திறம்பட தொடர்பு கொள்ளும் திறனும், ராஜதந்திர குணமும் அவர்களை சிறந்த தோழர்களாக ஆக்குகின்றன. அவர்களின் நேர்த்தியான மற்றும் வசீகரமான நடத்தை அவர்களின் வசீகரத்தை அதிகரிக்கிறது. துலாம் ராசிக்காரர்கள் தோற்றத்தை விட நடத்தையில் கவச்சியானவர்களாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












