Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இந்த 4 ராசிக்காரங்க தீய எண்ணங்கள் கொண்ட ஆபத்தானவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொரு ராசிக்காரரும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். சிலர் அமைதியானவராக இருந்து உலகை அன்பால் நிறைக்கும் போது சில ராசிக்காரர்கள் அதற்கு முற்றிலும் எதிர்மறையாக ஆக்ரோஷமானவர்களாக உலகம் முழுவதும் எதிர்மறை ஆற்றலை பரப்புகிறார்கள்.
எவ்வளவு முயற்சி செய்தும் சிலரால் கோபத்தையும் விரக்தியையும் அடக்க முடிவதில்லை. சிலர் அதை சண்டையாக, சில சமயங்களில் போராகவே மாற்றுகிறார்கள் மாற்றுகிறார்கள், மோசமான சந்தர்ப்பங்களில் மற்றவர்களை காயப்படுத்தத் தொடங்குகிறார்கள். இப்படிப்பட்ட தீயவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் ஆபத்தானவர்களாகவும், தீயவர்களாகவும் இருக்கும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
மிகவும் தீய ராசிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது விருச்சிக ராசி. விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தீய ராசியாகக் கருதப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் ராசியின் சின்னத்தைப் போலவே மிகவும் விஷத்தன்மையாக இருக்க முடியும். அவர்கள் மிகவும் இரகசியமானவர்கள், இது அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது. அவர்கள் எப்போதும் தங்கள் சுயநலம் மற்றும் தந்திரமான நடத்தை மூலம் உங்களை கடிக்க தயாராக இருக்கிறார்கள்.
சில விருச்சிக ராசிக்காரர்கள் ஒழுக்கக்கேடான ஆசைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்கள் விரும்புவதை எடுத்துக்கொள்ளவோ அல்லது பறித்துக் கொள்ளவோ எப்போதும் வெட்கப்பட மாட்டார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால், அது கிடைக்கும் வரை, தங்கள் அன்புக்குரியவர்களை கூட தொந்தரவு செய்ய தயங்க மாட்டார்கள். கடினமான தோலுக்கு அடியில் தங்கள் கருமையான பக்கத்தை மறைத்து, அவர்களின் உண்மையான தீய முகத்தை புரிந்து கொள்வதை தடுக்கும் திறமை அவர்களிடம் உள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் தீய ஆன்மாவை அவர்களின் இரட்டை முகம் கொண்ட அடையாளமே விளக்குகிறது. தீய குணங்களில் சில சமயங்களில் விருச்சிக ராசிக்காரர்களையே இவர்கள் மிஞ்சிவிடுவார்கள். மிதுன ராசிக்காரர்களின் இரட்டை முகம் இவர்களின் தீய குணத்தை பிரதிபலிக்கிறது. அவர்கள் செய்யக்கூடாத காரியங்கள் அனைத்தையும் செய்துவிட்டு தங்களின் அப்பாவி முகத்திற்குப் பின்னால் அனைத்தையும் மறைத்து விடுவார்கள்.
அவர்கள் மிகப்பெரிய நட்பு வட்டத்தைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்கள் மற்றும் தங்களின் சுயநல எண்ணங்களை நிறைவேற்ற தங்களின் நண்பர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களின் இதயத்தை உடைக்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள், மேலும் மற்றவர்களின் உணர்வுகளுடன் புத்திசாலித்தனமாக விளையாடுவார்கள். மற்றவர்களை தன்னால் சுயநல எண்ணங்களில் எளிதில் சிக்க வைத்து விடுவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் தீய ஆன்மாக்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். மேஷ ராசிக்காரர்களின் மிகவும் மோசமான தீய குணங்களில் ஒன்று அவர்களின் தற்காப்பு அணுகுமுறை. மேஷ ராசிக்காரர்கள் முன்கோப சுபாவம் கொண்டவர்கள் மற்றும் சுயநலவாதிகள், நீங்கள் அவர்களின் எல்லையை கடக்க முயற்சித்தால், அவர்கள் மிகவும் இரக்கமற்ற முறையில் உங்களைத் தாக்குவார்கள். அவர்கள் ஒருபோதும் தோல்விகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை, மேலும் தங்களின் எந்த தவறுகளையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமைத்துவ பண்புகள் கொண்டவர்கள் மற்றும் திறமையான கையாளுபவர்கள். ஆனால் அவர்களின் இழிவான மனப்பான்மையால் அவர்கள் தீய ராசிகளாக கருதப்படுகிறார்கள். மிகவும் அற்பமான பிரச்சினைகளுக்காக யாருடனும் சண்டையிடுவதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அவர்களால் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்ல முடியும், அது அவர்களை மோசமான நபர்களாக மாற்றினால் கூட அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
கன்னி
புத்திக்கூர்மை வாய்ந்த கன்னி ராசிக்காரர்கள் தீய ராசிகளின் பட்டியலில் இருப்பதற்கு காரணம் அவர்களின் மோசமான ஆதிக்கம் செலுத்தும் குணம். அவர்கள் மற்றவர்களை எளிதில் விமர்சிக்கக் கூடியவர்கள் மற்றும் ஒருவர் எப்படிப்பட்டவர்கள் என்பதை தாங்களாக தீர்மானிக்கும் குணம் கொண்டவர்கள். அவர்கள் மற்றவர்களை எதிர்மறை எண்ணங்களுக்குள் எளிதில் தள்ளுகிறார்கள் மற்றும் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளுகிறார்கள்.
அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் மற்றவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்களுடன் பணிபுரிபவர்கள் அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும் வகையில் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. இரக்கமற்ற மற்றும் இதயமற்ற அவர்களின் அணுகுமுறை அவர்களை தீயவர்களின் ராசி பட்டியலில் இடம்பெறச் செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












