Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
இந்த 4 ராசிக்காரங்க அனைவரும் மதிக்கும் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தலைமைத்துவம் மற்றும் அதிகாரம் என்பது அனைவரும் பாராட்டும் மற்றும் தங்களிடம் இருக்க வேண்டுமென்று விரும்பும் குணங்களாகும். ஆனால் அனைவரிடமும் இந்த சிறப்பான் குணங்கள் இருப்பதில்லை. இந்த குணங்கள் இருப்பவர்கள் சமூகத்தில் அனைவராலும் தலைவராக மாறுவார்கள். ஜோதிடத்தில் சில ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிகாரம் செலுத்தும் மற்றும் கட்டளையிடும் பண்புகளைக் கொண்டுள்ளனர், இந்த குணங்கள் அவர்களை சிறந்த தலைவராகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் மாற்றுகிறது.
இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வையால் மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் வலிமையான ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன்களுக்கு தனித்து நிற்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் ஆளுமை மிக்கவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ராசிகளில் ஒன்றாக பரவலாக அறியப்படுகிறது. செயல் மற்றும் தைரியத்தின் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் தைரியமான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர். அவர்கள் முன்முயற்சி எடுப்பதை விரும்புகிறார்கள் மற்றும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும் தலைவர்களாக இருக்கிறார்கள்.
மேஷ ராசியினரின் ஆதிக்கம் செலுத்தும் குணம், அவர்களின் தீவிரமான உற்சாகம் மற்றும் போட்டி மனப்பான்மையிலிருந்து வருகிறது. தங்கள் தைரியம் மற்றும் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் குணம் மூலம் அவர்கள் மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் புதிய பாதைகளை உருவாக்குபவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்மம் இயற்கையாகவே ஒரு ஆதிக்க ராசியாக பிரகாசிக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் தலைமை தாங்க பிறந்தவர்கள், பெரும்பாலும் அனைத்து விஷயங்களையும் அரச கம்பீரத்துடன் செய்கிறார்கள்.
அவர்களின் வசீகரமும், அரவணைப்பும் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கின்றன, மேலும் அவர்களை சக்திவாய்ந்த செல்வாக்கு செலுத்துபவர்களாக ஆக்குகின்றன. சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரத்தையும் தாராள மனப்பான்மையையும் இணைக்கும் ஒரு அதிசய ஆளுமையைக் கொண்டுள்ளனர்.
மகரம்
மகர ராசி என்பது ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்குரிய கிரகமான சனியால் ஆளப்படும் ராசியாகும். மகர ராசிக்காரர்கள் தங்கள் எதார்த்த அணுகுமுறை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவற்றின் மூலம் மரியாதையைப் பெறுகிறார்கள்.
மகர ராசிக்காரர்களின் தலைமைத்துவம் வியூகம் மற்றும் நீண்ட காலத் திட்டமிடலில் இருந்து வருகிறது. தங்களின் லட்சியத்தை அடைவதற்கு அடைய தங்களிடம் உள்ள திறமைகளையும், மக்களையும் ஒழுங்கமைப்பதில் அவர்கள் சிறந்தவர்கள். அவர்களின் தலைமைத்துவமும், உயர்ந்த இலட்சியமும் அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையைப் பெற்று தருகிறது.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் சாகச குணம் மற்றும் நம்பிக்கையான இயல்புக்குப் பெயர் பெற்றவர்கள். தனுசு ராசித் தலைவர்கள், பரந்த தொலைநோக்குப் பார்வை மற்றும் வளர்ச்சி மற்றும் ஆய்வு மீதான ஆர்வத்தின் காரணமாக ஆதிக்கம் செலுத்தும் தலைமைப் பண்பைக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் தங்கள் தன்னம்பிக்கை மற்றும் கற்றல் மீதான ஆர்வத்தால் மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள். தனுசு ராசித் தலைவர்கள் சவால்களை ஏற்கவும், எல்லைகளைத் தாண்டவும் அஞ்சுவதில்லை. இது அவர்களைத் துணிச்சலான மற்றும் ஊக்கமளிக்கும் தலைவர்களாக மாற்றுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
