Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
Moon Transit In Scorpio On 10 February 2026: வேத ஜோதிடத்தில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கிரகங்களிலேயே மிகவும் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். சொல்லப்போனால் இவர் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் தான் இருப்பார். இப்படிப்பட்ட சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார்.
குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவதால், சந்திரன் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சந்திரன் பிப்ரவரி 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியில் சந்திரன் பலவீனமாக இருப்பார்.

இப்படி சந்திரன் பலவீனமாக இருப்பதால், மன அமைதி கெடுவதோடு, நிதி பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். இந்த சந்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்வில் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் சந்திரனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சந்திரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். ஆகவே உணவு விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பண விஷயங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிறு அலட்சியம் பெரிய இழப்புக்கு வழிவகுக்கும். முக்கியமாக புதிய விஷயங்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சந்திரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அலுவலகம் அல்லது பணியிடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். சளி தொல்லையால் அவதிப்பட வாய்ப்புள்ளது. காலநிலை மாற்றத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும். தேவையற்ற செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மோசமான விளைவுகளைத் தவிர்க்க சிவலிங்கத்திற்கு நீர் அர்ப்பணிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சந்திரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களி மனஅமைதி பாழாகும். தேவையற்ற மன கவலைகள் அதிகரிக்கும். முக்கியமான வேலைகள் பாதியில் நின்று போக வாய்ப்புள்ளது. பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


