Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
November Month Horoscope 2025: நவம்பர் மாதத்தில் பணத்தை மூட்டை கட்டப்போற 4 ராசிகள் இவங்கதான்...உங்க ராசி என்ன?
November Month Horoscope 2025: 2025 முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கிறது. நவம்பர் மாதம் பிறப்பதற்கு ஒன்னும் சில நாட்களே உள்ளது. ஒவ்வொரு மாதமும் சில கிரக பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அந்த மாதம் முழுவதும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவம்பர் மாதமும் சில முக்கியமான கிரக பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.
நவம்பர் மாதத்தில் நடக்கப்போகும் கிரகப் பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது. இந்த மாதத்தில் அவர்கள் நிதிநிலை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என அனைத்திலும் முன்னேற்றத்தை அடைவார்கள். இந்த பதிவில் நவம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
நவம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் மற்றும் ஆசீர்வாதம் நிறைந்த மாதமாக இருக்கும். அன்பு, அழகு மற்றும் மிகுதியின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் மாதம் சிறப்பான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரப்போகிறது.
இந்த மாதம் பல புதிய தொடக்கங்களுக்கான மாதமாக இருக்கும், குறிப்பாக மாதத்தின் முதல் பாதி அவர்களுக்கு ராஜயோகம் தேடிவரும. மொத்தத்தில் இது தனிப்பட்ட மற்றும் நிதி வளர்ச்சிக்கான கதவுகளைத் திறக்கும் மாதமாக இருக்கும்.
கடகம்
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகள் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக பல நன்மைகள் கிடைக்கும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் கணிசமாக மேம்படும். உங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், மேலும் நீங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
கல்வித் துறையில், மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும் மற்றும் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். வணிகர்கள் தங்கள் வியாபாரத்தில் நிறைய வெற்றிகளைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். இது பல்வேறு முடிக்கப்படாத பணிகளை முடிப்பதற்கான சிறந்த காலமாக இருக்கும், மேலும் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். ஒரு சிறப்பு நபரின் வருகைக்கான வாய்ப்புகள் உள்ளன, அவர் உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றுவார்.
உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அதனால் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உறுதியுடன் வெளியே வர முடியும். திருமண வாழ்க்கையில், அமைதி இருக்கும், மேலும் நீங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த பெரிய உடல்நல பிரச்சனையையும் சந்திக்க மாட்டீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகள் சிறப்பான மாற்றங்களை உறுதி செய்கிறது. இந்த மாதத்தில் அவர்களின் நிதி நிலைமை இரட்டிப்பாகும். மேலும், வியாபாரத்தில் கிடைக்கும் லாபமும் இரட்டிப்பாகும். இந்த மாதத்தில் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எந்த விதமான நெருக்கடிகளும் இருக்காது என்பது மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் நீதிமன்ற வழக்குகள் அவர்களுக்கு சாதகமாகின்றன. கிரக மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
