புதனும், சுக்கிரனும் உதயமாவதால், ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப் போகுது...

Mercury Venus Rise In Gemini: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்களுள் சில கிரகங்கள் அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகும். அப்படி அஸ்தமனாகும் போதும் சரி, உதயமாகும் போதும் சரி, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இதில் கிரகங்கள் அஸ்தமனமாகும் போது பலவீனமாக இருக்கும். இதன் விளைவாக சற்று மோசமான பலன்களைப் பெறக்கூடும். உதயமாகும் போது, கிரகங்கள் முழு சக்தியைப் பெறும். இந்நிலையில் புதனும், சுக்கிரனும் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளனர்.

Mercury Venus Rise In Gemini These Zodiac Signs Will Get More Benefits

இதில் புதன் ஜூன் 23 ஆம் தேதி மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். அதைத் தொடர்ந்து ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரன் உதயமாகவுள்ளார். இவ்விரு கிரகங்களும் உதயமாவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது புதனும், சுக்கிரனும் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் சுக்கிர உதயமானது சிறப்பாக இருக்கப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சு மற்றவர்களை கவரும் வகையிலும், இனிமையாகவும் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். கூட்டு வணிகம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன், சுக்கிரனின் உதயமானது பணம் மற்றும் பேச்சின் வீட்டில் நிகழ்வதால் நல்ல பலனைத் தரப் போகிறது. குறிப்பாக எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆளுமை மேம்படும். இதனால் உங்களை அனைவருக்கும் பிடிக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

சிம்மம்

புதன் மற்றும் சுக்கிரனின் உதயமானது சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கப் போகிறது. வருமான வீட்டில் இவ்விரு கிரகங்களும் உதயமாவதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. மேலும் புதிய வருமான ஆதாரங்களையும் பெறக்கூடும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion