Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
3 கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாத கடைசியில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mercury Venus Mars Transit At End Of August 2024: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அவ்வாறு கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத இறுதியில் 3 கிரகங்கள் அடுத்தடுத்து ராசியை மாற்றவுள்ளன. அதில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் வக்ர நிலையில் கடக ராசியை அடைகிறார். அதன் பின் ஆகஸ்ட் 25 ஆம் தேதி செல்வத்திற்கு காரணியான சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிரகங்களின் தளபதியான செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி ஆகஸ்ட் மாத இறுதியில் 3 கிரகங்கள் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது ஆகஸ்ட் மாத இறுதியில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சுக்கிரன், புதனின் ராசி மாற்றம் பலவிதமான நன்மைகளை அளிக்கப் போகிறது. குறிப்பாக சொத்து பரிவர்த்தனைகளால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் எதிர்பாராத நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் முதலீடுகளை செய்தால், அது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதனின் ராசி மாற்றங்களானது அதிர்ஷ்டத்தைத் தரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். வணிகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைப்பதோடு, விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். தந்தையின் மூலம் நிதி ரீதியாக நல்ல ஆதாயங்களைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்களுக்கு லாபத்தைத் தரும் புதிய ஆர்டர் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரனின் ராசி மாற்றத்தால் ஆகஸ்ட் மாத இறுதியானது ரொம்பவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் குறைவான கடின உழைப்பால் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications