Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பிப்ரவரியில் 5 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது..
Mercury Transits 5 Times In February 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்ததாக குறுகிய நாட்களில் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக கருதப்படும் புதன், பிப்ரவரி மாதத்தில் 5 முறை பெயர்ச்சி அடைகிறார். அதில் புதன் பிப்ரவரி 07 ஆம் தேதி புதன் அவிட்டம் நட்சத்திரத்திற்கும், பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 15 ஆம் தேதி சதய நட்சத்திரத்திற்கும், பிப்ரவரி 22 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்திற்கும், இறுதியாக பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்கும் செல்லவுள்ளார்.

குறுகிய நாட்களில் 5 முறை தனது நிலையில் மாற்றங்களை செய்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் மற்றும் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். இப்போது பிப்ரவரி மாதத்தில் 5 முறை நடக்கும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
பிப்ரவரி மாதத்தில் நடக்கும் புதன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் பலவிதமான நற்பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக வருமானத்தில் மிகப்பெரிய அளவில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். இதனால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வணிகர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
சிம்மம்
பிப்ரவரியில் 5 முறை நடக்கும் புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பார்கள். அதுவும் திருமணமானவர்களாக இருந்தால், அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலித்து வந்தால், அவர்களுக்கு திருமணம் நடக்கவும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பிடித்தவர்களிடம் காதலை வெளிப்படுத்தினால், நேர்மறையான பதில் கிடைக்கும். பணியிடத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி
பிப்ரவரியில் நடக்கும் புதன் பெயர்ச்சிகளால் கன்னி ராசிக்காரர்கள் பல சாதகமான பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
இம்மாதத்தில் நிறைய செல்வம் மற்றும் புகழைப் பெறக்கூடும். ஏராளமான அளவில் பணத்தை சேமிக்க முடியும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதனின் ஆசியால் வியாபாரம் செழிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications