Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
சொந்த ராசிக்கு செல்லும் புதன்: செப்டம்பர் 23 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Mercury Transit In Virgo On 23 September 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு, பங்குச் சந்தை, பொருளாதாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் குறுகிய நாட்களே இருப்பார்.
தற்போது புதன் சூரியனின் ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி கன்னி ராசியில் புதன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக சொந்த ராசிக்கு புதன் செல்வதால், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது கன்னி ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 23 முதல் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். மேலும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் பேச்சுத்திறன் மேம்படும். இந்த பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வங்கி, ஊடகம், கல்வி, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கற்பனைத் திறன் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு புதிய திட்டங்கள் மனதில் தோன்றி, அது நல்ல லாபத்தைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் முதல் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மாணவர்கள் போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
