Latest Updates
-
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் ஆகஸ்ட் 22 வரை இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வெற்றிகள் குவியும்...
Mercury Transit In Magha Nakshatra 2024: ஜோதிடத்தில் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு நட்சத்திரத்தையும் மாற்றும். அப்படி மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். கிரகங்களில் பேச்சு, வணிகம், படிப்பு, வணிகம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் ஜூலை 19 ஆம் தேதி கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார்.
இந்த நட்சத்திரத்தில் புதன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இருப்பார். புதன் இந்த நட்சத்திரத்தில் நுழைந்துள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களுக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனால் மகிழ்ச்சி அடைவார்கள்.
சிலருக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வணிகர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல வெற்றிகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தரும். பல வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் நிறைய நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களை அளிக்கும். குறிப்பாக வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து, அதை முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications