Latest Updates
-
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
புதன் பெயர்ச்சியால் அக்டோபரில் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்காரராகும் கனவு நனவாகப்போகுது...
Mercury Transit In Libra 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், பகுத்தறிவு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இப்படிப்பட்ட புதன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 03 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனின் ராசிக்கு செல்லும் புதன், அதன் ராசியில் அக்டோபர் 24 ஆம் தேதி வரை இருப்பார். கிரகங்களில் புதனும், சுக்கிரனும் நட்பு கிரகங்களாவர்.

சுக்கிரனின் ராசிக்கு செல்லும் புதனின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு மிகவும் சிறப்பாக, அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது துலாம் ராசிக்கு செல்லும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டும் வகையில் இருக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். வேலையில் உங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் அமைதியும், சந்தோஷமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications