Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
சிம்மம் செல்லும் புதன்: இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை செழிப்பா இருக்கப்போகுது...
Mercury Transit In Leo On 19 July 2024: வேத ஜோதிடத்தில் புத்திகாரகனான புதன் படிப்பு, பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் வாழ்வில் இந்த அம்சங்களில் எல்லாம் தெரியும்.
அந்த வகையில் தற்போது புதன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் வருகிற ஜூலை 19 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்லவுள்ளார். சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனும், புதனும் நட்புறவு கொண்டிருப்பதால், இப்பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே சற்று நன்கு தெரியும்.

முக்கியமாக இந்த புதன் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் போகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பேச்சால் பல காரியங்களை முடிப்பார்கள். இப்போது சிம்மம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை, உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சுயமரியாதையும், தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் ரீதியாக பெரிய முடிவை எடுப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் மற்றும் உங்களிடம் சில முக்கியமான பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். அதேப் போல் சேமிக்கவும் முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவை பெறுவார்கள். வேலை தேடுபவர்கள் நல்ல வேலையைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் திருப்தி அடைவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றியும், செல்வமும் பெருகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications