Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
சிம்மம் செல்லும் புதன்: செப்டம்பர் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Mercury Transit In Leo On 04 September 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் ஒரு ராசியில் 27 நாட்கள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் வருகிற செப்டம்பர் 04 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்ம ராசியானது சூரியனின் ராசியாகும். புதன் சூரியனின் ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் புதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதால், லாபத்தைப் பெற முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். பணியிடத்தில் நிதி விஷயங்களில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் மனம் ஒருவித பதற்றத்துடனேயே இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களை ஏமாற்ற பலர் முயற்சிக்கலாம். பணியிடத்தில் சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறையும். பரம்பரை சொத்து பிரச்சனையால் உறவில் விரிசல் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை அதிகரிக்கலாம்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மோசமாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பெரிய செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நாட்டம் குறையலாம். இதனால் இலக்குகளை அடைய முடியாமல் அவதிப்பட நேரிடும். வியாபாரிகளுக்கு ஏற்றஇறக்கம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தை இழப்பார்கள். குடும்ப வாழ்க்கை பிரச்சனை நிறைந்ததாக இருக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications