Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
சிம்மம் செல்லும் புதன்: செப்டம்பர் 04 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mercury Transit In Leo On 04 September 2024: கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் தான் புதன். கிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதனின் நிலைகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், வாழ்வின் இந்த அம்சங்களில் அதன் தாக்கம் தெரியும். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 04 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு செல்லவுள்ளார்.

சிம்ம ராசியானது சூரியனின் ராசியாகும். புதன் சூரியனின் ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் வெற்றிகள் குவியும் மற்றும் பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். இப்போது புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே நோயால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து தொழில்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த பிரச்சனைகள் குறையும். இக்காலத்தில் வணிகர்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். பணியிடத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடித்து, நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications